முத்தி இலம்பகம் |
1711 |
|
|
(இ - ள்.) வேலை வாய் - துறவுக்குரிய நல் போதிலே; மணி இலை ஊழ்த்து வீழ்ப்பது - நீல மணிபோலும் இலைகளை முறைமைப்பட்டு உதிர்ப்பதாகிய; ஓர் காலை வாய் - ஒரு காலத்திடத்து; கற்பக மரத்தின் - கற்பக மரம்போலே; காவலன் மாலைவாய் அகில்தவழ் குஞ்சி மாற்றலின் - அரசன் மாலைப் போதிலே அகில் மணங்கமழும் சிகையைக் களைதலாலே; சோலைவாய்ச் சுரும்பு இனம் தொழுது சொன்ன - பொழிலில் வாழும் வண்டினம் தொழுது சில கூறின.
|
(வி - ம்.) வேலைவாய் - துறத்தற்கியன்ற நல்லபொழுதிலே, மணி - நீலமணி, காலம் வாய்த்தல் பெற்றதொரு கற்பகம் எனினுமாம். காவலன் : சீவகன். சொன்ன - சொன்னவை அடுத்த செய்யுளில் வரும்.
|
( 434 ) |
3033 |
தங்கிடை யிலாத்திருக் கேசந் தன்னையுங் | |
|
கொங்குடைக் கோதையுங் கொய்து நீக்கினாய் | |
|
நுங்கடை நோக்கிநாம் வாழும் வாக்கைய | |
|
மெங்கிடை யவரினி யெங்குச் செல்பவே. | |
|
|
(இ - ள்.) நாம் நும்கடை நோக்கி வாழும் வாழ்க்கையம் - யாங்கள் நும் வாயில் நோக்கி வாழும் வாழ்க்கையினேம்; தம்கிடை இலாத் திருக்கேசம் தன்னையும் - தமக்கு ஒப்பில்லாத அழகிய மயிரினையும்; கொங்கு உடைக் கோதையும் - தேன் கொண்ட மாலையினையும்; கொய்து நீக்கினாய் - வாங்கிப் போக்கினாய்; எம் கிடையவர் இனி எங்குச் செல்ப - எம்மைப் போன்றவர்கள் இனி எங்குச் செல்வார்கள்?
|
(வி - ம்.) கேசத்தையும் கோதையையும் விரும்பி நும்கடை நோக்கி வாழும் வாழ்வினேம். இனி, அவற்றை நீ கொய்து நீக்கியதால் எம்போலிகள் ஏங்குச் செல்வர். நீக்கினாய், நும் என்பவை ஒருமை பன்மை மயக்கம்.
|
( 435 ) |
3034 |
என்றன தேனின மிரங்கு வண்டொடு | |
|
சென்றன விடுக்கிய செல்வன் பொன்மயி | |
|
ரின்றொடு தொழுதன நும்மை யாமென | |
|
மன்றலுண் டவைவலங் கொண்டு சென்றவே. | |
|
|
(இ - ள்.) என்றன - என்று சுரும்பினம் கூறின; தேன் இனம் இரங்கு வண்டொடு - தேன் தொகுதியும் வருந்தும் வண்டுகளும்; செல்வன் பொன்மயிர் விடுக்கிய சென்றன - செல்வனுடைய அழகிய முடிமயிரை வழிவிடுப்பதற்குச் சென்றவை; மன்றல் உண்டு - மணத்தைப் பருகி; யாம் நும்மை இன்றொடு தொழுதனம் என - யாம் (உறவை விட்ட) நும்மை இன்று
|