| முத்தி இலம்பகம் |
1712 |
|
|
|
இறுதியாகத் தொழுதோம் என்று; அவை வலம் கொண்டு சென்ற - அவற்றை வலம் வந்து சென்றன.
|
|
(வி - ம்.) அவை என்பதை மிஞிறுகளுக்காக்கி, நால்வகை வண்டுகளில் ஏனையவையான மிஞிறுகள் வலங்கொண்டு பின் சென்றன என்பர் நச்சினார்க்கினியர்.
|
( 436 ) |
| 3035 |
மேற்படு கற்பக மாலை வேய்ந்துபொ | |
| |
னேற்புடைப் படலிகை யெடுத்துக் கொண்டுபோய் | |
| |
நாற்கடல் கடந்தவ னமோவென் றிட்டிடப் | |
| |
பாற்கடல் பனிமதி போல வீழ்ந்ததே. | |
| |
|
|
(இ - ள்.) மேற்படு கற்பக மாலை வேய்ந்து - மேலிடத்துண்டாகிய கற்பக மாலையாலே சூழ்ந்து; ஏற்பு உடைப் பொன்படலிகை எடுத்துக் கொண்டுபோய் - தகுதியுடையதொரு வெள்ளித் தட்டோடு எடுத்துக்கொண்டு சென்று; நாற்கடல் கடந்து - நாலுகடலைக் கடந்து; நமோ என்று அவன் இட்டிட - நமோ என்றுரைத்துச் சுதஞ்சணன் போகட; பாலகடல் பனிமதிபோல வீழ்ந்தது - பாற்கடலிலே அத்தட்டுக் குளிர்ந்த திங்கள்போல வீழ்ந்தது.
|
|
(வி - ம்.) பொன் - ஈண்டு வெள்ளி, படலிகை. தட்டு - பாற்கடல் நான்கு கடலுக்கு அப்பால் உள்ள ஐந்தாவது கடல் என்பது அருகர் கொள்கை. நமோ என்றது மறைமொழி.
|
( 437 ) |
வேறு
|
| 3036 |
ஏவா விருந்த வடிக ளிவர்வாய்ச்சொற் | |
| |
கோவா மணிகொழித்துக் கொண்டாலே போலுமாற் | |
| |
சாவா கிடந்தார் செவிச்சார்த்தி னப்பொழுதே | |
| |
மூவா வமரராய் முத்தணிந்து தோன்றுவரே. | |
| |
|
|
(இ - ள்.) ஏவா இருந்த அடிகள் இவர் வாய்ச்சொல் - இறைவன் புகழைச் சொல்லித் (துறந்த மகிழ்வுடன்) இருந்த அடிகளுடைய பரவிய வாய்ச்சொல்; கோவா மணி கொழித்துக் கொண்டாலே போலும் - துளையிடாத மாணிக்கத்தைக் குற்றம் நீக்கிக் கொண்டாற்போலும்; சாவா கிடந்தார் செவிச் சார்த்தின் - சாகும் நிலையில் உள்ளவர்கள் மனம் கொண்டு கேட்பராயின்; அப்பொழுதே மூவா அமரராய் முத்து அணிந்து தோன்றுவர் - அப்போதே கெடாத வானவராய் முத்து அணிந்து தோன்றுவர்.
|
|
(வி - ம்.) இவ்வாறு கூறினான் சுதஞ்சணன் என்க.
|