பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1713 

   இதுவும் அடுத்துவருஞ் செய்யுளும் சுதஞ்சணன் கூற்று. ”ஏவா சொல்லி - சாவா கிடந்தார்; உண்ணாகிடந்தார்” போல் நிகழ்கால முணர்த்திற்று என்பர் நச்சினார்க்கினியர். செய்யா என்னும் வாய்பாட்டெச்சம் என்க. அடிகள் என்றது, சீவகசாமியரை, கோவாமணி - கோக்கப்படாத மணி. சொல்லுக்குவமை. சாவா கிடந்தார் - சாகும் நிலையிற் கிடந்தவர்.

( 438 )
3037 தோளா மணிகுவித்தாற் போன்றிலங்கு தொல்குலத்துச்
சூளா மணியாய்ச் சுடர விருந்தானை
வாளார் முடிவைர விற்றிளைத்து வண்டரற்றுந்
தாளார வேத்திப்போய்த் தன்கோயில் புக்கானே.

   (இ - ள்.) தோளா மணி குவித்தால் போன்று - துளையிடப் பெறாத மாணிக்கத்தைக் குவித்தாற்போல; இலங்கு தொல்குலத்துச் சூளாமணியாய் - விளங்கும் பழமையான குடியிலே ஒரு தலைமையான மணியாக சுடர இருந்தானை - விளங்க இருந்த சீவகனை; வாள் ஆர்முடி வைரவில் திளைத்து - தன் ஒளி நிறைந்த முடியிலே உள்ள வைர ஒளி பயின்று வண்டு அரற்றும் தாள் ஆர ஏத்திப் போய் - வண்டுகள் முரலும் அடி பொருந்த வாழ்த்திச் சென்று; தன் கோயில் புக்கான் - தன் அரண்மனையை அடைந்தன்.

   (வி - ம்.) சுதஞ்சணன் தன் முடி சீவகன் அடியிலே திளைக்க வாழ்த்திச் சென்று தன் கோயில் புக்கான் என்க. (வைர ஒளி) 'திளைத்து' என்னும் எச்சம் (வண்டுகள்) 'அரற்றும்' என்னும் பிறவினை கொண்டது; 'அம்முக் கிளவியும்' (தொல். வினை. 34) என்னுஞ் சூத்திர விதியால்.

   இவ்விரு செய்யுளினும் கூறப்படுவோன் சுதஞ்சணனே என்பதை அடுத்த செய்யுளிற்,  'புக்கான் சுதஞ்சணனும்' என்பதால் அறியலாம்.

( 439 )
3038 புக்கான் சுதஞ்சணனும் பொற்றா மரைமகளிர்
தொக்காலே போலுந்தன் றேவிக் குழாஞ்சூழ
மிக்கான் குணம்பாடி யாடி மிகுதீம்பா
றொக்க கடல்போற் சுதங்கணி றைந்தனவே.

   (இ - ள்.) சுதஞ்சணனும் - (படலிகையைக் கடலில் வீழ்த்திச் சீவகன் சிறப்பைக் கூறி வணங்கிய) சுதஞ்சணனும்; பொன் தாமரை மகளிர் தொக்காலே போலும் - பொற்றாமரையில் வாழுந் திருமகளிர் குழுமினாற் போன்ற; தன் தேவிக்குழாம் சூழ - தன் மனைவியர் குழுச் சூழ; மிக்கான் குணம் பாடி ஆடி - சிறந்த சீவகனுடைய குணத்தைப் பாடி ஆடியவாறு; புக்கான் - தன் கோயிலை அடைந்தான்; மிகு தீபால் தொக்க கடல்போல்