| முத்தி இலம்பகம் | 
1714  | 
 | 
  | 
| 
 சுதங்கள் நிறைந்தன - பின்னர், மிக இனிய பால் திரண்ட கடலைப்போல (சுதஞானம் எனும்) நூலுணர்ச்சிகள் நிறைந்தன. 
 | 
| 
    (வி - ம்.) முற்செய்யுளில் 'தன் கோயில் புக்கான்' என்றார். இச்செய்யுளில் அவன் புக்கபடியைக் கூறினார். 
 | 
( 440 ) | 
|  3039 | 
பற்றாவஞ் செற்ற முதலாகப் பாம்புரிபோன் |   |  
|   | 
முற்றத் துறந்து முனிகளா யெல்லாரு |   |  
|   | 
முற்றுயிர்க்குத் தீம்பால் சுரந்தோம்பி யுள்ளத்து |   |  
|   | 
மற்றிருள் சேரா மணிவிளக்கு வைத்தாரே. |   |  
|   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) எல்லாரும் - நந்தட்டனும் தோழன்மாரும்; பற்று ஆர்வம் செற்றம் முதலாகப் பாம்பு உரிபோல் முற்றத்துறந்து - பற்றும் ஆர்வமும் செற்றமும் முதலாகப் பிறவற்றையும் பாம்பு தோலுரிப்பதைப் போல முழுமையுந் துறந்து; முனிகளாய் -துறவிகளாய்; உயிர்க்கு உற்றுத் தீம்பால் சுரந்து ஓம்பி - உயிர்களுக்குப் பொருந்தி அருளைச் சொரிந்து பாதுகாத்து; உள்ளத்து இருள் சேரா மணிவிளக்கு வைத்தார் - நெஞ்சிலே அறியாமை சேராத மெய்யறிவை வைத்தார். 
 | 
| 
    (வி - ம்.) ”படநாகந் தோலுரித்தாற் போற்றுறந்து கண்டவர் மெய்பனிப்ப நோற்றிட்டு” என்றார் முன்னரும் (1549). ”துறவறமாவது நாகந் தோலுரித்தாற்போல அகப்பற்றும் புறப்பற்றும் அறுத்து இந்திரிய வசமறுத்து முற்றத் துறத்தல்” என்றார் சிலப்பதிகாரத்தும் உரையாசிரியர் (14 - 11 - உரை.) பற்று - பெற்றதன்மேல் நிகழும் ஆசை. ஆர்வம் - பெறாததன்மேல் நிகழும் ஆசை. தீம்பால் என்றது கருணையை. மணிவிளக்கு - சுருதஞானம். 
 | 
( 441 ) | 
|  3040 | 
கோமா னடிசாரக் குஞ்சுரங்கள் செல்வனபோற் |   |  
|   | 
பூமாண் டிருக்கோயிற் புங்கவன்றாள் சோ்ந்தேத்தித் |   |  
|   | 
தாமார்ந்த சீலக் கடலாடிச் சங்கினத்துட் |   |  
|   | 
டூமாண் வலம்புரியின் றோற்றம்போற் புக்காரே. |   |  
|   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) கோமான் அடிசாரக் குஞ்சரங்கள் செல்வன போல் - பரத சக்கரவர்த்தியின் அடியைச் சேர யானைத்திரள் செல்வனபோல; பூமாண் திருக்கோயில் புங்கவன் தாள் சேர்ந்து ஏத்தி - புவியிற் சிறந்த திருக்கோயிலில் இருந்த சீவர்த்தமானன் அடியைச் சேர்ந்து வாழ்த்தி; தாம் ஆர்ந்த சீலக்கடல் ஆடி - தாம் நிறைந்த ஒழுக்கக் கடலிலே ஆடி; சங்கினத்துள் தூமாண் வலம்புரியின் தோற்றம்போல் புக்கார் - சங்கின் தொகுதியிலே தூய சிறப்புற்ற வலம்புரி தோன்றினாற்போலச் சீவகசாமியும் திரளும் முனிவர் குழுவிலே புகுந்தனர். 
 |