| முத்தி இலம்பகம் |
1715 |
|
|
|
(வி - ம்.) கோமான் என்றது பரதசக்கரவர்த்தியை. ”இலங்கல் ஆழியினான் களிற்றீட்டம் போல்” என்றார் நாமகளிலம்பத்தும் (32) புங்கவன் : சீவர்த்தமானன். வலம்புரி - சீவகனுக்குவமை.
|
( 442 ) |
31. சேணிகன் வரவு
|
வேறு
|
| 3041 |
மட்டலர் வனமலர்ப் பிண்டி வாமனார் | |
| |
விட்டலர் தாமரைப் பாதம் வீங்கிரு | |
| |
ளட்டலர் பருதியி னளிக்கச் செல்லுநாட் | |
| |
பட்டதோர் பொருளினிப் பழிச்சு கின்றதே. | |
| |
|
|
(இ - ள்.) வீங்கு இருள் அட்டு - பேரிருளைக் கொன்று; அலர் பகுதியின் - அலர்ந்த ஞாயிறுபோல; மட்டு அலர் வனமலர்ப் பிண்டி வாமனார் - தேன் விரியும் அழகிய மலரையுடைய அசோகின் நிழலில் எழுந்தருளிய அருகப் பெருமானின்; விட்டு அலர் தாமரைப் பாதம் - முறுக்குடைந்து மலரும் தாமரை மலர் போலும் அடிகள்; அளிக்கச் செல்லும் நாள் - இருவினையைக் கெடுத்து அருள் பண்ணும்படி வழிபட்டுச் செல்லும் நாளிலே; பட்டது ஓர் பொருள் இனிப் பழிச்சுகின்றது - பிறந்ததொரு பொருள் இனி யான் கூறுகின்றது.
|
|
(வி - ம்.) இது நூலாசிரியர் கூற்று.
|
|
வாமனார் பாதம் இருள் அட்டு அளிக்க என்க. வாமனார் - அருகக் கடவுள். இருள் - இருவினை இருள்சேர் இருவினை என்றார் வள்ளுவனாரும். பட்டது - நிகழ்ந்தது. பொருள் - நிகழ்ச்சி. பழிச்சுதல் - கூறுதல்.
|
( 443 ) |
வேறு
|
| 3042 |
கயலின முகளிப் பாய | |
| |
முல்லையம் பொதும்பிற் காமர் | |
| |
புயலின மொக்குள் வன்கட் | |
| |
குறுமுயல் புலம்பிக் குன்றத் | |
| |
தயல்வளர் கின்ற வாமான் | |
| |
குழவியோ டிரிந்து செந்நெல் | |
| |
வயல்வளர் கரும்பிற் பாயு | |
| |
மகதநா டென்ப துண்டே. | |
|
|
(இ - ள்.) கயல் இனம் உகளிப் பாய - கயலின் தொகுதி எழுந்து பாய்வதாலே; முல்லைஅம் பொதும்பில் - முல்லைப்
|