| முத்தி இலம்பகம் |
1717 |
|
|
| 3044 |
மருமுடி மன்னர் சூழ | |
| |
வலரணி பிண்டி வேந்தன் | |
| |
றிருவடி விருந்து செய்வான் | |
| |
றிரண்முர சறைவித் தானே. | |
| |
|
|
(இ - ள்.) எரி மிடைந்த அனைய மாலை - தீ நெருங்கினாற் போன்ற மாலையையும்; இனம் மணி திருவில் வீசும் திருமுடி - பலவகை மணிகள் அழகிய ஒளியைச் சொரியும் அழகிய முடியையும்; ஆரம் மார்பின் - ஆரம் அணிந்த மார்பினையும் (உடைய); சேணிகன் நாமம் என்ப - சேணிகன் என்பது (அந் நகர மன்னனின்) பெயர் என்பர்; அருமுடி மன்னர் சூழ அலர் அணிபிண்டி வேந்தன் - அரிய முடியையுடைய வேந்தர் சூழ, மலர் அணிந்த பிண்டியின் நீழல் வேந்துக்கு; திருவடி விருந்து செய்வான் திண்முரசு அறைவித்தான் - திருவடி வழிபாடு செய்யத் திண்ணிய முரசினை அறைவித்தான்.
|
|
(வி - ம்.) சேணிகள் - சிரேணிக மகராசன்.
|
|
எரி - நெருப்பு. திருவில் - அழகிய ஒளி, அந்நகரத்து அரசன் நாமம் சேணிகன் என்ப என்க. பிண்டி வேந்தன் - அருகன், விருந்து - பூசனை.
|
( 446 ) |
வேறு
|
| 3045 |
பொன்னா வழியாற் புகழ்நாவழித் | |
| |
தாய்ந்த மெல்கோன் | |
| |
மின்னார் மணிப்பூ ணவன்மேவிவிண் | |
| |
காறு நாறு | |
| |
முன்னோர் வகுத்த முகவாசம் | |
| |
பொதிந்த வெந்நீர் | |
| |
மன்னார வாய்க்கொண் டுமிழ்ந்தான் | |
| |
மணிமாலை வேலோன். | |
|
|
(இ - ள்.) மணிமாலை வேலோன் - முத்தாரம் அணிந்த வேலோனாகிய; மின்ஆர் மணிப்பூணவன் - ஒளி நிறைந்த மணிக்கலனுடையோன்; ஆய்ந்த மெல்கோல் மேவி - ஆராய்ந்த மெல்லிய கோலைக் கொண்டு பல் விளக்கி; பொன் நா வழியால் புகழ் நா வழித்து - பொன்னாலாகிய நா வழியாலே புகழ்பெற்ற தன் நாவை வழித்து; விண்காறும் நாறும் முன்னோர் வகுத்த முகவாசம் பொதிந்த வெந்நீர் - வானளவும் மணக்கின்ற முன்னோர் அமைத்த முகவாசம் நிறைந்த வெந்நீரை; மன் ஆர வாய்க்கொண்டு உமிழ்ந்தான் - பொருந்த நிறைய வாயிலே கொண்டு (கொப்புளித்து) உமிழ்ந்தான்.
|