பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1718 

   (வி - ம்.) முகவாசம் என்பவை ஈண்டு வாய் கொப்புளிக்கும் நீரிற் கலக்கும் பனிநீர் முதலியவை. நச்சினார்க்கினியர், 'பொதிந்த வெந்நீர்' என வேறு பிரித்து, 'மருந்துகள் இட்டுக்காய்ந்த துவர்நீர்' என்றும், 'முகவாசம் வாய்க்கொண்டு' எனக் கூட்டி அடுத்த செய்யுளிற் குளகமாக்கியும் கூறுவர்.

( 447 )
3046 தீம்பா னுரைபோற் றிகழ்வெண்பட் டுடுத்து வண்டார்
தேம்பாய சாந்த மெழுகிக்கலன் றேறன் மாலை
தாம்பால தாங்கிப் புகழ்தாமரைக் குன்ற மன்ன
வாம்பான் மயிர்வேய்ந் தயிராவண மேறி னானே.

   (இ - ள்.) தீ பால் நுரைபோல் திகழ் வெண்பட்டு உடுத்து - இனிய பாலின் நுரைபோல விளங்கும் வெண்பட்டை உடுத்து; வண்டு ஆர் சாந்தம் மெழுகி - வண்டுகள் நிறைந்த சந்தனத்தை மெழுகி; தேம்பாய் தேறல்மாலை - இனிமை பரவிய மதுக்கமழும் மாலையும்; கலன் - பூண்களும்; பாலதாங்கி - (ஆகிய) பலவற்றை அணிந்து; புகழ் தாமரைக் குன்றம் அன்ன - வெண்தாமரை மலர்ந்த குன்றுபோல; ஆம்பால் மயிர் வேய்ந்து - தான் அணிந்தவற்றின் பகுதியாகிய வெள்ளிய மயிரை வேய்ந்து (நின்ற); அயிராவணம் ஏறினான் - ஐராவணத்தின்மேல் ஏறினான்.

   (வி - ம்.) ஐராவனம் : இஃது இந்திரன் யானை; இதுவும் வெள்ளியது.

   'வண்டுஆர் சாந்தம்' எனவும் 'தேம்பாய மாலை' எனவும் கூட்டுக. 'தேறல் கலம்' எனக்கூட்டித் 'தேறுதலையுடைய கலம்' என்பர் நச்சினார்க்கினியர்.

( 448 )

வேறு

3047 எறிசுரும் பரற்று மாலை
  யெரிமணிச் செப்பு வெள்ளம்
பொறிவரி வண்டு பாடும்
  பூஞ்சுண்ண நிறைந்த பொற்செப்
பறிவரி துணர்வு நாணித்
  தலைபணித் தஞ்சுஞ் சாந்தஞ்
செறியிரும் பவழச் செப்புத்
  தெண்கடற் றிரையி னேரே.

   (இ - ள்.) எறி சுரும்பு அரற்றும் மாலை எரிமணிச் செப்பு வெள்ளம் - மோதி வண்டுகள் முரலும் மலர் மாலையையுடைய, ஒளி வீசும் மணிச்செப்புத்திரளும்; பொறிவரி வண்டு பாடும் பூஞ்சுண்ணம் நிறைந்த பொன்செப்பு - புள்ளிகளையும் வரிகளையும் உடைய வண்டுகள் பாடும் அழகிய சுண்ணப்பொடி நிறைந்த