பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 172 

307 வீட லின்றிக் கொளப்பெறுவார்
  விலக்கல் வேண்டா வீழ்ந்தீர்க்குக்
கோடி மூன்றோ டரைச்செம்பொன்
  கோமா னல்கு மெனவறைமின்.

   (இ - ள்.) மாடம் ஓங்கும் வளநகருள் - மாடம் உயர்ந்த வளமிகும் அரண்மனையில்; வரம்புஇல் பண்டம் தலைதிறந்திட்டு - அளவற்ற பொருள்களைக் காப்பு நீக்கிவிட்டு; ஆடை செம்பொன் அணிகலங்கள் யாவும் - ஆடையும் பொன்னும் பணிகளும் என இவற்றையெல்லாம்; எழுநாள் வீடல்இன்றி யாரும் கவர்ந்து கொளப்பெறுவார் - ஏழுநாள்வரை தடையின்றி எல்லோரும் கவர்ந்துசெல்லும் உரிமை பெறுவார்; விலக்கல் வேண்டா- அவர்களைத் தடைசெய்ய வேண்டா; வீழ்ந்தீர்க்குக் கோமான் கோடி மூன்றோடு அரைச் செம்பொன் நல்கும்என அறைமின் - விரும்பினீர்க்கு மன்னன் மூன்றரைக்கோடி செம்பொன் தானமாக அளிப்பான் என்று முரசறைமின்.

 

   (வி - ம்.) எழுபிறப்புத் தீவினை நீங்க எழுநாள் கொளப்பெறுவார். எழுபிறப்பு : மக்கள், விலங்கு, பறவை, ஊர்வன, நீர்வாழ்வன, மலைதாவரம் என்பன; இவற்றுள் மலையை நீக்கித் தேவரைக் கூட்டி யுரைப் பாரும் உளர். வீடல்: விடல் என்பதன் விகாரம் ஆம். விடல்-நீக்கல். உடம்பிற்கு மூன்றரைக் கோடி மயிர் உளவாகலின் மூன்றரைக்கோடி நல்குமென்றாள்.

 

   வளநகர் - வளப்பமுடைய அரண்மனை. பண்டம் என்றது - உணவுப் பொருள்களை. விடுதல்-வீடல் என நின்றது. வீழ்ந்தீர்க்கு - விரும்பினீர்க்கு.

( 278 )
308 அரும்பொற் பூணு மாரமு
  மிமைப்பக் கணிக ளகன்கோயி
லொருங்கு கூடிச் சாதகஞ்செய்
  தோகை யரசர்க் குடன்போக்கிக்
கருங்கைக் களிறுங் கம்பலமுங்
  காசுங் கவிகள் கொளவீசி
விரும்பப் பிறப்பாய் வினைசெய்தேன்
  காண விஃதோஒ பிறக்குமா.

   (இ - ள்.) அகன்கோயில் - பெரிய அரண்மனையில்; அரும்பொன் பூணும் ஆரமும் இமைப்பக் கணிகள் ஒருங்கு கூடி - அரிய பொன்னும் அணியும் மாலையும் ஒளிவிடக் கணிகள் எல்லோருங் கூடி; சாதகம் செய்து - பிறப்புநாள் கணிக்க; அரசர்க்கு உடன் ஓகை போக்கி - எல்லா அரசர்க்கும் நீ பிறந்த மகிழ்ச்சியை