பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1722 

   (இ - ள்.) வெண்திரைப் புணரிசூழ் வேலி வேந்தன் - வெள்ளிய அலைகளையுடைய கடல்சூழ்ந்த வேலிக்கு மன்னன் ஆகிய சேணிகன்; வண்டுசூழ் பூப்பலி சுமந்து - வண்டுகள் சூழும் மலர்ப்பலியைச் சுமந்து; வலம் கொண்டு சூழ்ந்து கோனடி எழுமுறை இறைஞ்சி - வலம் வந்து சூழ்ந்து இறைவனடியை ஏழுமுறை வணங்கி; எண் திசையவர்களும் மருள ஏத்தினான் - எட்டுத் திக்கினில் உள்ளவர்களும் மயங்க வாழ்த்தினான்.

   (வி - ம்.) புணரியைச் சூழ்ந்த வேலி சக்கரவாளகிரி. அதற்கு வேந்தன் எனவே சேணிகன் சக்கரவர்த்தி யாயினான்.

( 454 )

வேறு

3053 பகல்வளர் பவழச் செந்தீப்
  பருதிமுற் பட்ட தேபோ
லிகல்வினை யெறிந்த கோமா
  னிணையடி யொளியிற் றோன்றா
தகல்விசும் புறையுந் தேவ
  ரொளியவிந் திருப்ப மன்னன்
முகிழ்கிழி மதியம் போலு
  முனிக்குழா நோக்கி னானே.

   (இ - ள்.) பகல்வளர் பவளச் செந்தீ பருதிமுன் பட்டதே போல் - பகலில் வளரும் பவளம்போலும் செந்தீ ஞாயிறுமுன் ஒளிமழுங்கினாற்போல; இகல்வினை எறிந்த கோமான் இணையடி ஒளியின் - தீவினையை எறிந்த இறைவனின் இணையடி ஒளியின் முன்னால்; அகல் விசும்பு உறையும் தேவர் ஒளி தோன்றாது அவிந்து இருப்ப - பரவிய வானில் வாழும் வானவர் ஒளி வெளிப்படாமல் மழுங்கியிருந்த அளவிலே; மன்னன் முகில் கிழிமதியம் போலும் முனிக்குழாம் நோக்கினான் - சேணிகன் முகிலைக் கிழித்துவரும் திங்கள்போலும் முனிவர் திரளை நோக்கினான்.

   (வி - ம்.) பகல்வளர்தீ, பவழச் செந்தீ எனத் தனித்தனி கூட்டுக. பருதி - ஞாயிறு, கோமான் - இறைவன், மன்னன் : சேணிகன், வினையீனீங்கி விளங்குதற்கு முகில் கிழிமதியம் என்றார்.

( 455 )
3054 கண்வெறி போக வாங்கோர்
  கடுந்தவ னுருவ நோக்கி
யொண்ணெறி யொருவிக் கோமா
  ணொளிதிரண் டிருந்த தாங்கொல்