முத்தி இலம்பகம் |
1723 |
|
|
3054 |
விண்ணெறி வழுவி வீழ்ந்த | |
|
விண்ணவ னொருவன் கொல்லென் | |
|
றெண்ணெறி யாது மோரா | |
|
திருந்திது கூறி னானே | |
|
|
(இ - ள்.) ஆங்கு ஓர் கடுந்தவன் உருவம் கண் வெறிபோக. நோக்கி - அவ்விடத்தே ஒரு கடிய தவமுடைய முனிவன் உருவைக் கண்ணின் ஆவல் தீரப் பார்த்து; கோமான் ஒளி திரண்டு ஒண்நெறி ஓருவி இருந்ததாம் கொல்? - இறைவன் ஒளி கூடி, ஒள்ளிய நெறியினின்றும் தப்பிப்போய் இருந்ததோ?; விண்நெறி வழுவி வீழ்ந்த விண்ணவன் ஒருவன் கொல் என்று - வான் வழி தப்பி வீழ்ந்த வானவன் ஒருவனேயோ? என்று; எண்ணெறி யாதும் ஓராது இருந்து இது கூறினான். எண்ணும் நெறியாற் சிறிதும் அறுதியிட முடியாமல் இதனைக் கூறினான்.
|
(வி - ம்.) ஆங்கோர் கடுந்தவன் என்றது சீவகசாமியை, கோமான் ஒளி அவனோடிருக்கும் நெறிதப்பித் தனித்திருந்ததோ என்று ஐயுற்றான் என்றவாறு. எண்ணெறி - ஆராயும்வழி. ஓர்தல் - முடிவுசெய்தல், இது - இம்மொழி; (கீழ் வருமொழி.)
|
( 456 ) |
வேறு
|
3055 |
விளங்கொளி விசும்பறுத் திழிந்து விண்ணவ | |
|
னிளங்கதி ரெனத்துறந் திருப்பக் கண்டனம் | |
|
வளங்கெழு முக்குடை யடிகள் வாய்மொழி | |
|
துளங்கின னெனத் தொழு திறைஞ்சி னானரோ. | |
|
|
(இ - ள்.) விண்ணவன் விளங்கு ஒளி விசும்பு அறுத்து இழிந்து - வானவன் ஒருவன் விளங்கும் ஒளியையுடைய வானைவிட்டு இறங்கி; இளங்கதிர் எனத் துறந்து இருப்பக் கண்டனம் - இளஞாயிறுபோலத் துறவு பூண்டிருப்பப் பார்த்தோம்; வளம் கெழும் முக்குடை அடிகள் வாய்மொழி துளங்கினன் என - வளம் பொருந்திய முக்குடையின் கீழ் எழுந்தருளிய இறைவன் கூறிய ஆகமநெறியைத் தப்பினான் என்று கூறி; தொழுது இறைஞ்சினான் - (சுதன்மர் என்னும் கணதரரை) கை கூப்பி வணங்கினான்.
|
(வி - ம்.) விண்ணவன் - ஒரு விண்ணவன் என்பதுபட நின்றது. இளங்கதிர் - இளஞாயிறு. முக்குடையடிகள் - அருகக் கடவுள். வாய்மொழி - ஆகமம். துளங்கினன் - தப்பினான். அரோ : அசை, இது சேணிகன் கூற்று. இளம் பருவத்துத் துறவுத்தோற்றம் விண்ணவன் வந்து மண்ணகத்தே தங்கியிருந்த தொக்கும்.
|
( 457 ) |