முத்தி இலம்பகம் |
1725 |
|
|
3058 |
திருவி னோடகன்ற மார்பிற் | |
|
சீவக சாமி யென்பா | |
|
னுருவினோ டொளியு நோக்கி | |
|
னொப்புமை யுலகி னில்லை | |
|
மருவினா ரிமைத்து நோக்கின் | |
|
மனம்பிறி தாகி நிற்பா | |
|
ரரிதிவன் முகத்து நோக்க | |
|
லழகொளி யன்ன வென்றான். | |
|
(இ - ள்.) திருவினோடு அகன்ற மார்பின் சீவகசாமி என்பான் - (இவன்) திருமகளோடு கூடி அகன்ற மார்பினையுடைய சீவகசாமி எனப்படுவான்; உருவினோடு ஒளியும் நோக்கின் ஒப்புமை உலகின் இல்லை - இவன் அழகையும் புகழையும் ஆராய்ந்தால் உவமை உலகில் இல்லை ; மருவினார் இமைத்து நோக்கின் மனம் பிறிது ஆகி நிற்பார் - (இவனை) நெருங்கினோர் இமைத்துப் பார்த்தால் அவன் அல்லன் என்று மனம் வேறு ஆகிய நிற்பார்; அழகு ஒளி அன்ன - நீ கூறிய அழகும் ஒளியும் நீ கூறிய தெய்வத் தன்மையேயாக இருக்கும்; இவன் முகத்து நோக்கல் அரிது என்றான் - (ஆதலால்) இவனிடத்துப் பார்த்தல் அரிது என்றான்.
|
(வி - ம்.) இது கணதரர் சேணிகனுக்குக் கூறியது. என்பான் - எனப்படுவான், உரு - அழகு: உட்குமாம், ஒளி - புகழ், மருவினார் - எய்தியவர், அவனல்லன் என மனம் பிறிதாகி என்க.
|
( 460 ) |
32.சேணிகன் வினா
|
3059 |
மாதவன் சரிதமுந் துறந்த வண்ணமு | |
|
மேதமின் றியம்புமி னடிக ளோவெனப் | |
|
போதலர் புனைமுடி யிறைஞ்சி யேத்தினான் | |
|
காதலிற் கணந்தொழக் காவன் மன்னனே. | |
|
|
(இ - ள்.) காவல் மன்னன் கணம் காதலின் தொழ - உலக காவலனாகிய மன்னவன் முனிவர் குழு கேட்கவேண்டும் என்னும் காதலுடன் தொழும்படி; அடிகளோ! - அடிகளே!, மாதவன் சரிதமும் துறந்த வண்ணமும் - சீவகசாமியின் முற்பிறப்புத் தவ வரலாற்றையும், பற்றற்றுத் துறந்தசெய்திகளையும்; ஏதம் இன்று இயம்புமின் என - குற்றமின்றாகக் கூறுமின் என்று; போது அலர் புனைமுடி இறைஞ்சி ஏத்தினான் - மலரையுடைய ஒப்பனைசெய்த முடியினால் வணங்கிப் போற்றினான்.
|