| நாமகள் இலம்பகம் | 
173  | 
  | 
| 
 உடனே அறிவித்து; கவிகள்கொளக் கருங்கைக் களிறும் கம்பலமும் காசும் வீசி - பாவலர் கொள்ளுமாறு பெரிய கையையுடைய களிறும் கம்பலமும் காசும் கொடுத்து; விரும்பப் பிறப்பாய் - (யாவரும்) விரும்புமாறு பிறக்கும் நீ; வினைசெய்தேன் காணப்பிறக்கும்ஆ இஃது - தீவினையேன் காணும்படி பிறக்கும் தன்மை இத்தன்மைத்து. 
 | 
  | 
| 
    (வி - ம்.) ஓஓ: இரக்கக் குறிப்பு. 'பிறக்கும் ஆறு' என்பது 'பிறக்கும்ஆ' என விகாரப்பட்டது. செய்து - செய்ய: வினையெச்சத் திரிபு. 
 | 
  | 
| 
    பிறப்பாய் : வினையாலணையும் பெயர். கவிகள் : பெருமங்கலம் பாடுவோர். 
 | 
  | 
| 
    கணிகள் - கணிதநூல் வல்லோர். சாதகம் - பிறப்புக் கணிதம். ஓகை - உவகை: இஃது ஆகுபெயராய் உவகைச் செய்தியை உணர்த்தும். 
 | 
( 279 ) | 
|  309 | 
வெவ்வா யோரி முழவாக |  
|   | 
  விளிந்தா ரீமம் விளக்காக |  
|   | 
வொவ்வாச் சுடுகாட் டுயரரங்கி |  
|   | 
  னிழல்போ னுடங்கிப் பேயாட |  
|   | 
வெவ்வாய் மருங்கு மிருந்திரங்கிக் |  
|   | 
  கூகை குழறிப் பாராட்ட |  
|   | 
விவ்வா றாகிப் பிறப்பதோ |  
|   | 
  இதுவோ மன்னர்க் கியல்வேந்தே. | 
 
 
 | 
| 
    (இ - ள்.) வெவ்வாய் ஓரி முழவுஆக - கொடிய வாயையுடைய ஓரியின் குரல் முழவு ஆகவும்; விளிந்தார் ஈமம் விளக்கு ஆக - இறந்தவரைச் சுடும் ஈமத்தீ விளக்கு எனவும் (கொண்டு); ஒவ்வாச் சுடுகாட்டு உயர் அரங்கில் - தகுதியற்ற சுடுகாடாகிய உயர்ந்த மேடையிலே; பேய் நிழல்போல் நுடங்கி ஆட - பேய் நிழல்போல அசைந்து ஆட; கூகை எவ்வாய் மருங்கும் இருந்து இரங்கிக் குழறிப் பாராட்ட - (அதனைக் கண்டு) கூகைகள் எப்பக்கத்தினும் அமர்ந்து இரக்கத்துடன் குழறும் ஒலியிற் பாராட்ட; இவ்வாறாகிய பிறப்பதோ! - இந்த இரங்கத்தக்க நிலையிற் பிறப்பதன் தீவினைதான் என்னே!; வேந்தே! இதுவோ மன்னர்க்கு இயல்? - அரசே! இதுவோ அரசர்க்குரிய தன்மை? (கூறுவாய்.) 
 | 
  | 
| 
    (வி - ம்.) 'வேந்தே?' என்றாள் அரசிளங்குமரனாதலின். 
 | 
  | 
| 
    [நச்சினார்க்கினியர், 'இவ்வாறென்றது, தந்தை விரும்பும்படி நல்வினையுடைய தன்மையை. இதுவென்றது செயலின்றித் தாய் வருந்தும் படி தீவினையுடைய தன்மையை. 'ஓகாரமிரண்டும் வினா' எனப் பொருள் 
 | 
  |