பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1734 

கடல்போன்ற, (கருமத் தெவ்வருடைய) படை; துளங்கப் போர் செய்தது - நடுங்கும்படி போர் செய்தது.

   (வி - ம்.) உறக்கு - உறக்கம் ஊண் - உணவு. மறப்பு - மறதி, வளியும் பித்தும் ஐயும் வந்து அடையும் பிணி என்க. பொல்லாச்சிந்தனை-அசுப்பரிணாமம். நினைவின் வழியே செயல் வருதலின் இது வாயிலாயிற்று. சுற - சுறாமீன். இது கடலுக்கு அடை, அக்கருமத்தெவ்வர் தானை என்க.

( 477 )
3076 தெளிவறுத் தெழுவர் பட்டா
  ரீரெண்மர் திளைத்து வீழ்ந்தார்
களிறுகா லுதைப்ப வெண்மர்
  கவிழ்ந்தனர் களத்தி னுள்ளே
பிளிறிவீழ் பேடி பெண்ணோ
  யறுவகைத் துவர்ப்பும் பேசி
னளிபடு சிந்தை யென்னு
  மாழிவாய் வீழ்ந்த வன்றே.

   (இ - ள்.) களத்தினுள்ளே எழுவர் தெளிவு அறுத்துப் பட்டார் - அப்போர்க்களத்தில் (கருமத்தெவ்வர் படையில்) எழுவர் கலங்கிப் பட்டார்; ஈரெண்மர் திளைத்து வீழ்ந்தார் - பதினறுவர் பொருது வீழ்ந்தனர்; களிறுகால் உதைப்ப எண்மர் கவிழ்ந்தனர் - நல்ல சிந்தையென்னும் களிறு காலால் உதைப்ப எண்மர் கவிழ்ந்தனர்; பிளிறி வீழ் பேடி - அப்போது கூவி வீழ்கின்ற பேடு என்னும் மறையும்; பெண் நோய் - பெண் மறையும்; அறுவகைத் துவர்ப்பும் - அறுவகையான துவர்ப்பும்; பேசின் - கூறினால்; அளிபடு சிந்தை என்னும் ஆழி வாய் வீழ்ந்த - தண்ணளியையுடைய சிந்தனை என்கிற ஆழியின் வாயிலே பட்டன.

   (வி - ம்.) எழுவர் : மித்தியாத்துவம், சம்யக் மித்தியாத்துவம், சம்மியத்துவப் பிரகிருதி, அநந்தாநுபந்திக் குரோதம், அநந்தா நுபந்திமானம், அநந்தாநுபந்தி மாயை, அநந்தாநுபந்திலோபம், இவை முறையே கற்பிளப்புப்போல்வதூஉம், கற்றூண் போல்வதூஉம், வெதிர்வேர் முடங்கல் போல்வதூஉம், உலைமூக்கிற் பற்றின கிட்டம் பேல்வதூஉம், சேறுபோல்வதூஉம், சேறும் நீருங் கலந்தாற் போல்வதூஉம், மண்ணின் மேல் தெளிந்த நீர் போல்வதூஉம் என்று கொள்ளப்படும்.

”மலைநிலனே மணல்நீர்க் கீற்றிவை வெகுளிக் குவமமாம்
சிலையென்பு திமிசுத்தூண் செங்கொழுந்து பெருமிதக்கா
முலைமாயை முதிர்வெதிர்போர்த் தகர்மருப்பு நார்விடை நீர்
உலையுசவு நீர்மஞ்சள் துகிலினீர் உலோபக்கே.”

அநந்தாநுபந்திக் குரோத முதலாகச் சஞ்சுவலனலோப மிறுதியாகக் கிடந்த இப்பதினாறு கஷாயமும் விரித்துக்கொள்க.] இவை உவமை காட்டினபடி.