பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1735 

ஈரெண்மராவர்:

”இருகதி நாற்சாதி யீராநு பூர்வி
வெயில் விளக்கு நிற்றல் நுணுகல் - பொதுவுடம்பு
நித்தாதி மூன்றோ டிவைபதினா றென்றுரைப்பர்
எப்பொருளுங் கண்டுணர்ந்தோர் ஈண்டு”

   அவற்றுள், இருகதி : நரக கதி, விலங்கு கதி. நாற்சாதியாவன : ஏகேந்திரிய சாதிநாம கர்மம், துவீந்திரிய சாதிநாம கர்மம், திரீந்திரிய சாதி நாம கர்மம், சதுரிந்திரிய சாதிநாம கர்மம், ஈராநுபூர்வி யாவன : நரக கத்தியாநுபூர்வி, திரியக்கத்தியா நுபூர்வி, வெயிலென்றது, ஆதப நாம கருமத்தை விளக்கென்றது, உத்தியோத நாமகர்மத்தை, நிற்றல் என்றது, தாவரநாம கர்மத்தை, நுணுகல் என்றது, சூக்குமநாம கர்மத்தை, பொதுவுடம்பென்றது, சாதாரண சரீரத்தை, அஃது ஓருயிர்க்கு உடம்பாய் நின்றே பல்வேறு உயிர்க்கும் உடம்பாதல், அவை கடுகுமூலம், கற்றாழை முதலியன; கிளுவை முதலாகக் கொம்புநட்டால் ஆவனவுமாம். நித்தாதி மூன்றாவன : நித்திராநித்திரையும், பிரசலாப் பிரசலையும், ஸ்தியானக் கிரந்தியுமாம், அவற்றுள் நித்திரா நித்திரையாவது, உறக்கத்தின் மேலுறக்கம், பிரசலாப் பிரகலையாவது, துளக்கத்தின்மேல் துளக்கம், ஸ்தியானக்கிரந்தியாவது, கனவிற் செய்தது நனவில் அறியாமை.

   எண்மர் : அப்பிரத்தியாக்கியானக் குரோதம், அப்பிரத்தியாக் கியான மானம், அப்பிரத்தியாக்கியான மாயை, அப்பிரத்தியாக்கியான லோபம், பிரத்தியாக்கியான குரோதம், பிரத்தியாக்கியன மானம், பிரத்தியாக்கியான மாயை, பிரத்தியாக்கியா லோபம் என்பன. இவை முறையே நிலம் பிளந்தாற்போல்வதூஉம், எலும்பு போல்வதூஉம், உசவு போல்வதூஉம், மணற்கீற்றுப் போல்வதூஉம், திமிசுத்தூண் போல்வதூஉம், வாளின் வாய்நார் போல்வதூஉம், நீர்மஞ்சள் போல்வதூஉம், என்று கொள்ளப்படூஉம்.

   அறுவகைத்துவர்ப்பு : ஆசியம், இரதி, அரதி, சோகம், பயம், சுகுச்சை, ஆசியம் - சிரித்தல், இரதி - வேண்டுதல், அரதி - வேண்டாமை, சோகம் - அசைவு, பயம் - அச்சம். சுகுச்சை - அருவருப்பு.

   பிளிறுதல் - அரற்றுதல்.

( 478 )
3077 மயக்கப்போர் மன்னன் மக்கண்
  மந்திரி யவரும் வீழ
வியப்புறு வேத வில்வாய்.
   வேட்கையம் பெடுத்திட் டெய்யக்
கலக்கமி லசுப மென்னுங்
  குந்தத்தாற் கணைபெய்ம் மாரி
விலக்கித்திண் வெறுப்பு வாளால்
  விரைந்துயி ரவனை யுண்டான்.

   (இ - ள்.) மயக்கப்போர் மன்னன் மக்கள் மந்திரியவரும் வீழ - மயக்கப்போர் மன்னனுடைய மக்களும் அமைச்சர்களும்