| முத்தி இலம்பகம் |
1736 |
|
|
|
வீழ; வியப்புறு வேத வில்வாய் வேட்கை அம்பு எடுத்திட்டு எய்ய (பின்பு, அம்மன்னன்) வியக்கத்தக்க புருட வேதம் என்கிற வில்லின் வாயிலே தாக மோகம் என்கிற அம்புகளைத் தொடுத்து எய்ய ; கலக்கம் இல் அசுபம் என்னும் குந்தத்தால் - கலக்கம் இல்லாத அசுபம் என்கிற குந்தத்தாலே; கணைபெய்மாரிய விலக்கி - அந்த அம்பு மழையை விலக்கி; வெறுப்புத்திண் வாளால் விரைந்து அவனை உயிர் உண்டான் - உடம்பை வெறுத்தலாகிய திண்ணிய வாளால் விரைந்து அவன் உயிரைப் பருகினான்.
|
|
(வி - ம்.) மயக்கம் - மோகநீயம், முற்செய்யுளிற் பட்டவர்களாகக் கூறப்பட்டவர்களெல்லாம் அவனுடைய மக்களும் மந்திரிகளும் அசுபமாவது : தோல், இரத்தம், இறைச்சி, மேதை, எலும்பு, மச்சை, சுவேத நீராயிருக்கும் இவ்வுடம்பென்று கருதின கருத்து.
|
( 479 ) |
| 3078 |
கரும்பெறி கடிகை போன்றுங் | |
| |
கதலிகைப் போழ்கள் போன்று | |
| |
மரும்பொறிப் பகைவர் தம்மை | |
| |
யுறுப்பறத் துணித்து மீர்ந்து | |
| |
மருந்தெறி பிணியைக் கொல்லு | |
| |
மருத்துவன் போன்று மாதோ | |
| |
விருந்தெறிந் தெறியு மூவர் | |
| |
மேற்படை யியற்றி னானே. | |
|
|
(இ - ள்.) கரும்பு எறி கடிகை போன்றும் - கருப்பந்துண்டம் போன்றும்; கதலிகைப் போழ்கள் போன்றும் - வாழைத் துண்டுகள் போன்றும்; அரும்பொறிப் பகைவர் தம்மை உறுப்பு அறத் துணித்தும் ஈர்ந்தும் - அரிய ஐம்பொறியாகிய பகைவரை உறுப்புகள் அற வெட்டியும் பிளந்தும் ; மருந்து எறி பிணியைக் கொல்லும் மருத்துவன் போன்று - மருந்தினை எறியும் பிணியைப்போக்கும் மருத்துவனைப் போன்று ; இருந்து எறிந்து எறியும் மூவர்மேல் படை இயற்றினான் - நிலையாக இருந்து எறிந்து கொல்லத்தக்க ஐ வளி பித்து எனும் மூவர் மேற் படையை விடுத்தனன்.
|
|
(வி - ம்.) கடிகை - துண்டம். போழ் - துண்டம், பொறி - மெய் வாய் கண் மூக்குச் செவிகளாகிய ஐம்பொறிகள். பொறிப்பகைவர் - பொறியாகிய பகைவர் என்க. மருந்தெறி மருத்துவன், பிணியைக் கொல்லும் மருத்துவன் என்த தனித்தனி கூட்டுக. மாதும் ஓவும் அசைகள் மூவர் - ஐயும் பித்தும் வளியுமாகிய மூவர். இக்குறிப்புள்ள திருக்குறள், ”புக்கி லமைந்தின்று கொல்லோ உடம்பினுள், துச்சிலிருந்த உயிர்க்கு.”-340
|
( 480 ) |