| முத்தி இலம்பகம் |
1738 | |
|
|
பெயரோர் (தாக்க); விராகு எனும் வேலின் வீழ வெகுண்டனன் அவரும் வீழ்ந்தார் - (அவரை) விராகம் என்னும் வேலாலே வெகுண்டு தாக்கினான்; அவர்களும் பட்டனர்.
|
|
(வி - ம்.) நால்வர் : சஞ்சுவலனக் குரோதம், சஞ்சுவலன மானம், சஞ்சுவலன மாயை, சஞ்சுவனல லோபம், அவை முறையே நீர்க்கீற்றுப்போல்வதூஉம், செங்கொழுந்து போல்வதூஉம், விடை நீர் போல்வதூஉம், துகில்நீர் போல்வதூஉம், என்று கொள்ளப்படும். நிரோதனை - செறிப்பு, விராகம் என்பது விகாரமாயிற்று.
|
( 482 ) |
| 3081 |
புணரிபோற் சிறுபுண் கேள்விப் | |
| |
படையொடு புகைந்து பொங்கி | |
| |
யுணர்வொடு காட்சி பேறென் | |
| |
றிடையுறு கோக்க ளேற்றா | |
| |
ரிணரெரி முழக்க மன்ன | |
| |
சுக்கிலத் தியான மென்னுங் | |
| |
கணையெறிந் துகைப்ப வீழ்ந்து | |
| |
காற்படை சூழப் பட்டார். | |
|
|
(இ - ள்.) உணர்வொடு காட்சி பேறு என்று இடையுறு கோக்கள் - உணர்வும் காட்சியும் பேறும் என்று சொல்லப்பட்டு மறுபடையாக வரும் அரசர்; புணரிபோல் சிறு புன் கேள்விப் படையொடு புகைந்து பொங்கி ஏற்றார் - கடல்போலப் பெரிய சிறிய புல்லிய கேள்வியையுடைய படையொடு வந்து புகைந்து கிளர்ந்து எதிர்த்தனர்; இணர் எரி முழக்கம் அன்ன சுக்கிலத் தியானம் என்னும் கணை எறிந்து உகைப்ப - கிளைத்தலையுடைய நெருப்பின் முழக்கம்போன்ற சுக்கிலத் தியானம் என்கிற அம்பு பட்டுத் தள்ளுகையினாலே; கால்படை சூழ வீழ்ந்து பட்டார் - காலாட்படை சூழ்ந்து கிடக்க வீழ்ந்து பட்டார்.
|
|
(வி - ம்.) ஈண்டுக் கூறிய கடலனைய சிறு புன் படை : நெறியல்லா நெறி ஒழுகும் சமயங்கள்.
|
|
உணர்வு: மதிஞானாவரணீயம், சுருதஞானாவரணீயம், அவதி ஞானாவரணீயம், மனப்பரியய ஞானாவரணீயம், கேவலஞானாவரணீயம், அவற்றுள் : மதி ஞானாவரணீயம் - சுபாவ புத்தியை மறைப்பது. சுருதஞானாவரணீயம் - சுருத ஞானத்தை மறைப்பது, அவதி ஞானாவரணீயம் - அதீதகதமான பரிஞானத்தை மறைப்பது; அஃதாவது தன்னுடைய முற்பிறப்பை அறியும் அறிவை மறைப்பது, கேவல ஞானாவரணீயம் - திரிகால ஞானத்தையும் மறைப்பது.
|
|
காட்சி : சக்கு தரிசனாவரணீயம், அசக்கு தரிசனாவரணீயம், அவதி தரிசனாவரணீயம், கேவல தரிசனாவரணீயம், சக்கு தரிசனாவரணீயம்
|
|
|