| முத்தி இலம்பகம் |
1739 |
|
|
|
கண்ணால் அறியும் அறிவுக்குமுன் காணுங் காட்சியை மறைப்பது. அசக்கு தரிசனாவரணீயம் - கண்ணொழிந்த நான்கு பொறிகளினாலும் அறியும் அறிவை மறைப்பது. அவதி தரிசனாவரணீயம் - அவதிஞானத்துமுன் காணுங் காட்சியை மறைப்பது. கேவல தரிசனாவரணீயம் - கேவல ஞானத்துக்குமுன் காணும் காட்சியை மறைப்பது.
|
|
பேறு : தானாந்தராயம், இலாபாந்தராயம், போகாந்தராயம், உபபோகாந்தராயம், வீரியாந்தராயம், தானாந்தராயம் -கொடையினை விலக்குவது. இலாபாந்தராயம் - ஊதியத்தை இடையிலே விலக்குவது. போகாந்தராயம் - துய்த்தற்குரிய இன்பங்களை விலக்குவது. உபபோகாந்தராயம் - நுகர்தற்குரிய பொருள்களை விலக்குவது, வீரியாந்த ராயம் - வீரியத்தை விலக்குவது.
|
|
காற்படை : பரிசேந்திரியம், நயனேந்திரியம் முதலியன.
|
( 483 ) |
| 3082 |
காதிப்போர் மன்னர் வீழக் | |
| |
கணையெரி சிதறி வெய்யோ | |
| |
னோதிய வகையி னொன்றி | |
| |
யுலகுச்சி முளைத்த தேபோல் | |
| |
வீதிபோ யுலக மூன்றும் | |
| |
விழுங்கியிட் டலோக நுங்கி | |
| |
யாதியந் தகன்ற நான்மைக் | |
| |
கொடியெடுத் திறைமை கொண்டான். | |
|
|
(இ - ள்.) காதிப் போர் மன்னர் வீழ - உபாதியாகிய, போர் வேந்தர் பட்டு வீழும்படி; கணைஎரி சிதறி - கணையாகிய நெருப்பைத் தூவிக் கொன்று; ஓதிய வகையின் ஓன்றி - ஆகமத்தில் ஓதிய கூற்றிலே பொருந்தி; வெய்யோன் உலகு உச்சி முளைத்ததே போல் - ஞாயிறு உலகின் உச்சியிலே தோன்றியதைப்போல; வீதிபோய் - பரவிப் போய்; உலகம் மூன்றும் விழுங்கியிட்டு - உலகம் மூன்றையும் விழுங்கி; அலோகம் நுங்கி - அலோகத்தையும் விழுங்கி; ஆதி அந்தம் அகன்ற நான்மைக் கோடி எடுத்து - ஆதியும் அந்தமும் அகன்ற நான்கு கூறாகிய வெற்றிக் கொடியை எடுத்து; இறைமைகொண்டான் - இறைவனாந் தன்மையைக் கொண்டான்.
|
|
(வி - ம்.) அந் நான்காவன : அநந்தஞானம், அநந்ததரிசனம், அநந்தவீரியம், அநந்தசுகம் என இவை.
|
( 484 ) |
| 3083 |
பசும்பொனி னுலகிற் றேவர் | |
| |
பயிர்வளை முரச மார்ப்ப | |
| |
வசும்புசோ் களிறு திண்டே | |
| |
ரலைமணிப் புரவி வேங்கை | |
| |
விசும்பியங் கரியோ டாளி | |
| |
விடைமயி லன்ன நாக | |
| |
நயந்தவை பிறவு மூர்ந்து | |
| |
நாதன்றாள் கோயில் கொண்டார். | |
|