பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1740 

 

   (இ - ள்.) பசும்பொனின் உலகில் தேவர் - பசிய பொன்னுலகிலே வாழும் வானவர்கள்; அசும்புசேர் களிறு திண்தேர் அலைமணிப் புரவி வேங்கை விசும்பு இயங்கு அரியோடு ஆனி விடைமயில் அன்னம் நாகம் நயந்தவை பிறவும் ஊர்ந்து - அசும்பு கின்ற களிறும் தேரும் புரவியும் வேங்கையும் வானில் இயங்கும் அரியும் ஆளியும் விடையும் மயிலும் அன்னமும் நாகமும் விரும்பியவை பிறவும் ஏறி; நாதன்தாள் கோயில் கொண்டார் - இறைவன் திருவடியைக் கோயிலாகக் கொண்டார்.

   (வி - ம்.) பயிர்வளை : வினைத்தொகை, பயிர்தல் - அழைத்தல், வளை-சங்கு, மதமுசும்புதல் சேர்ந்த களிறு என்க. அசும்புதல் ஒழுகுதல். அலைமணி : வினைத்தொகை அரி - சிங்கம், விடை - காளை, நாதன : இறைவன், தாளைக் கோயிலாகக் கொண்டார் என்க.

( 485 )
3084 நறுமலர் மாலை சாந்தம்
  பரூஉத்துளித் துவலை நன்னீர்க்
கறைமுகில் சொரியக் காய்பொற்
   கற்பக மாலை யேந்திச்
சிறகுறப் பரப்பி யன்னம்
  பறப்பன போல வீண்டி
நிறைகடல் விஞ்சை வேந்தர்
  நீணில மன்னர் சோ்ந்தார்.

   (இ - ள்.) நிறை கடல் விஞ்சை வேந்தர் - நிறைந்த கடல் போன்ற விஞ்சை வேந்தர்; காய்பொன் கற்பக மாலை ஏந்தி - ஒளிரும் பொனன்ர்லாகிய கற்பக மாலையை ஏந்தி; அன்னம் பறப்பனபோலச் சிறகு உறப் பரப்பி ஈண்டி - அன்னம் பறப்பன போலச் சிறகை நன்குறப் பரப்பி வந்து கூடி; சேர்ந்தார் - தாளைச் சேர்ந்தார்; நறுமல் மாலை சாந்தம் பரூஉத் துளித்துவலை நன்னீர் - நறுமண மலர்மாலையும் சந்தனமும் பெரிய துளியாகிய துவலையைத் தெளிக்கும் பனிநீரும்; கறைமுகில் சொரிய - கரிய முகில்போலச் சொரிய; நீள் நில மன்னர் சேர்ந்தார் - பெரு நிலத்து வேந்தர் வந்து சேர்ந்தார்.

   (வி - ம்.) எதிர் நிரல்நிறையாகக் கொள்க. சேர்ந்தார் என்பதை இரண்டிடத்துங் கொள்க.