| முத்தி இலம்பகம் |
1741 |
|
|
|
விஞ்சை வேந்தர்க்கு அன்னமும், நீணில மன்னர்க்கு முகிலும் உவமையாக் கொள்க. சேர்ந்தார் என்னும் பயனிலையை இரண்டெழு வாய்க்கும் தனித்தனியே இயைத்துக் கொள்க.
|
( 486 ) |
| 3085 |
விண்ணியங் கருக்கன் வீழ்ந்து | |
| |
மீனிலங் கொள்வ தேபோன் | |
| |
மண்ணெலாம் பைம்பொன் மாரி | |
| |
மலர்மழை சொரிந்து வாழ்த்தி | |
| |
யெண்ணிலாத் தொழில்க டோற்றி | |
| |
யிந்திரர் மருள வாடிக் | |
| |
கண்முழு துடம்பிற் றோன்றிச் | |
| |
சுதஞ்சணன் களிப்புற் றானே. | |
|
|
(இ - ள்.) விண் இயங்கு அருக்கன் வீழ்ந்து மீன்நிலம் கொள்வதே போல் - வானில் உலவும் ஞாயிறு வீழ்ந்து விண்மீன்களுடன் நிலம் கொள்வதைப்போல; மண் எலாம் பைம்பொன்மாரி மலர்மழை சொரிந்து வாழ்த்தி - நிலவுலகெங்கும் பைம்பொன் மழையையும் பூமாரியையும் பெய்து வாழ்த்தி; எண்ணிலாத் தொழில்கள் தோற்றி இந்திரா மருள -கணக்கில்லாத தொழில்களைத் தோற்றுவித்து இந்திரர் மருள; சுதஞ்சணன் கண் உடம்பில் முழுதும் தோன்றி ஆடிக் களிப்புற்றான் - சுதஞ்சணன் கண்கள் உடம்பெலாந் தோன்றி ஆடிக் களிப்புற்றான்.
|
|
(வி - ம்.) தொழில்கள் தோற்றி - கூத்து முதலிய களியாடல்கள் தோற்றி.
|
|
நச்சினார்க்கினியர், 'அருக்கன் விரும்பி மருளவும், வின்மீன்போல மண்ணிலுள்ளார் குவிந்து மலர்மழை சொரிந்து மருளவும், இந்திரர் பொன்மாரி பெய்து தொழில்கள் தோற்றி மருளவும் சுதஞ்சணன் ஆடிக் களிப்புற்றான்' என்பர்.
|
( 487 ) |
| 3086 |
குளித்தெழு வயிர முத்தத் | |
| |
தொத்தெரி கொண்டு மின்ன | |
| |
வளித்துல கோம்பு மாலை | |
| |
யகன்குடை கவித்த தாங்கு | |
| |
வளிப்பொர வுளருந் திங்கட் | |
| |
கதிரெனக் கவரி பொங்கத் | |
| |
தெளித்துவில் லுமிழுஞ் செம்பொ | |
| |
னாசனஞ் சோ்ந்த தன்றே. | |
|