| முத்தி இலம்பகம் |
1742 |
|
|
|
பொரும்படி உளர்கின்ற கவரி திங்களின் கதிர் எனப் பொங்க; தெளித்து வில் உமிழும் செம்பொன் ஆசனம் சேர்ந்தது - தெளிவுறுத்தி ஒளியைச் சொரியும் பொன்னணை சேர்ந்தது; குளித்து எழு வயிரம் முத்தத் தொத்து எரிகொண்டு மின்ன - (எரியும் மாணிக்க மாலையாலே) தம் ஒளி மறைந்து, பின்னரும் எழுகின்ற வயிரத்தையும் முத்துக் கொத்தையும் கொண்டு மின்ன; உலகு அளித்து ஓம்பும் மாலை அகன்குடை கவித்தது - உலகை அளித்து ஓம்பும், மாலையையுடைய பரவிய குடை கவித்தது.
|
|
(வி - ம்.) குடை எரியுமாணிக்க மாலையாலே தம்மொளி மறைந்து பின்னரும் எழும் வயிரத்தையும் முத்தத் தொத்தையுங்கொண்டு மின்னக் கவித்தது என்க. தொத்து - கொத்து, வளிப்பொரப் : எதுகை நோக்கி, பகரமிரட்டித்தது.
|
( 488 ) |
(மணியரும்பதம்)
|
வேறு
|
| 3087 |
மணியுமிழ் திருக்கேசம் வானவர கிற்புகையும் | |
| |
பிணியவிழ்ந்த கற்பகமும் பெயர்ந்தோடக் கமழமா | |
| |
றுணியரு வினையெறிந்தாற் கதுநாற்றஞ் சொல்லலா | |
| |
மணிதிக ழரசுவா வதன்கடாஞ் சாற்றாதோ. | |
| |
|
|
(இ - ள்.) அணிதிகழ் அரசு உவா அதன் கடாம் சாற்றாதோ? - அழகு விளங்கும் பட்டத்து யானையை அதன் மதமே கூறாதோ?; (அதுபோல்); துணி அருவினை எறிந்தாற்கு நாற்றம் அது - நீக்குதற்கு அரியது என்று துணிந்த வினையைக் கெடுத்தாற்கு இயல்பாக உளதாம் நாற்றமாகிய அதனை; மணி உமிழ் திருக்கேசம் அகில் புகையும் வானவர் பிணி அவிழ்ந்த கற்பகமும் பெயர்ந்து ஓடக் கமழும் - நீல மணியின் நிறத்தைச் சொரியும் அழகிய கேசமே, அகிற் புகையும் வானவருடைய முறுக்கவிழ்ந்த கற்பக மலரும் கெட்டுப்போம்படி கமழ்ந்து கூறா நிற்கும்; சொல்லலாம் - ஆதலால் (நமக்கும் அதன் தன்மை) சொல்லலாம்.
|
|
(வி - ம்.) மணி - நீலமணி, திருக்கேசம் - அழகிய மயிர், வானவர் கற்பகம் என ஒட்டுக. கமழுமால் - ஆல் : அசை. துணித்தல் அரிய வினை எனினுமாம். அரசுவா - பட்டத்தியானை, கடாம் - மதநீர், சாற்றோதோ - ஓ : எதிர்மறை; சாற்றும் என்க.
|
( 489 ) |
| 3088 |
முழங்குதிரு மணிமுறுவன் | |
| |
முருக்கிதழ் கொடிப்பவளத் | |
| |
தழக்குரல்வாய் தளையவிழ்ந்த | |
| |
மந்தாரந் தவநாறு | |
| |
மழுங்கல் சூழ் வினைவெறுத்தாற் | |
| |
கதுநாற்ற மறியலாம் | |
| |
வழங்குபொன் வரைவளரும் | |
| |
பைங்கண்மா வுரையாதோ. | |
|