|
(இ - ள்.) வழங்கு பொன்வரை வளரும் பைங்கண்மா உரையாதோ? - ஒளியைத தரும் பொன்மலையிலே வளரும் பசிய கண்களையுடைய புழுகு பூனையை அதனிடத்து வழங்கும் மணமே கூறாதோ? (அதுபோல); அழுங்கல் சூழவினை வெறுத்தாற்கு - இரக்கத்தையுடையதாய்ச் சூழ்ந்த வினையை வெறுத்துக் கெடுத்தாற்கு; நாற்றம் அது - இயல்பாக உளதாம் நாற்றமாகிய அதனை ; திருமணி முறுவல், முருக்கு இதழ் கொடிப் பவழத்து, முழங்கு தழங்கு, குரல்வாய் - அழகிய முத்துப்போலும் முறுவலை உடையதும், முருக்கிதழீனையும் கொடிப் பவழத்தினையும், போன்றதும், பேரொலி செய்யும் குரலையுடையதும் ஆகிய வாயே; தளைஅவிழ்ந்த மந்தாரம் தவநாறும் - முறுக்கவிழ்ந்த மந்தாரம் கெட நாறிக் கூறும்; அறியலாம் - (ஆதலால் நமக்கும் அதன் தன்மை) அறிந்து கூற இயலும்.
|