பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1745 

வேறு

3091 சுறவுக்கொடிக் கடவுளொடு காலற்றொலைத் தோயெம்
பிறவியறு கென்றுபிற சிந்தை யிலராகி
நறவமலர் வேய்ந்துநறுஞ் சாந்துநில மெழுகித்
துறவுநெறிக் கடவுளடி தூம மொடுதொழுதார்.

   (இ - ள்.) சுறவுக் கொடிக் கடவுளொடு காலன் தொலைத்தோய் - மீனக் கொடியுடைய வானவனாகிய காமனையிம் காலனையுந் தொலைத்தவனே!; எம் பிறவி அறுக என்று - எம் பிறப்பை நீக்கு என்று; பிற சிந்தை இலர் ஆகி - வேறெண்ணம் இல்லாதவராகி; நறவ மலர் வேய்ந்து நறுஞ்சாந்து நிலம் மெழுகி - தேனையுடைய மலரை வேய்ந்து, நல்ல சந்தனத்தாலே நிலம் மெழுகி; துறவு நெறிக் கடவுள் அடி - துறவிலே நின்ற அருகன் அடியை; தூமமொடு தொழுதார் - நறும்புகையிட்டு; (விஞ்சையர்) தொழுதார்.

   (வி - ம்.) 'நிலும் மெழுகி, மலர் வேய்ந்து, தூபமிட்டுத் துறவு நெறிக் கடவுள் அடியைப் பிற சிந்தையிலராய் எம் பிறவி அறுக என்று தொழுதனர்' என முடிபு கொள்க.

   சுறவுக் கொடிக் கடவுள் - காமன், காலன் - கூற்றுவன், துறவு நெறிக் கடவுள் என்றது, சீவகனை.

( 493 )
3092 பாலனைய சிந்தைசுட ரப்படர்செய் காதி
நாலுமுட னேயரிந்து நான்மைவரம் பாகிக்
காலமொரு மூன்றுமுட னேயுணர்ந்த கடவுள்
கோலமலர்ச் சேவடிகள் கொண்டுதொழு தும்யாம்.

   (இ - ள்.) பால் அனைய சிந்தை சுடர - சுக்கிலத் தியானத்தையுடைய சிந்தை விளங்குகையினாலே; படர்செய் காதி நாலும் உடனே அரிந்து - துன்பஞ் செய்யும் காதி முதலான நான்கையும் ஒன்றாக அரிந்து; நான்மை வரம்பு ஆகி - நால்வகை வரம்புடனே; காலம் ஒரு மூன்றும் உடனே உணர்ந்த கடவுள் - மூன்று காலங்களையும் ஒன்றாக உணர்ந்த கடவுளே!; கோலம் மலர்ச் சேவடிகள் கொண்டு யாம் தொழுதும் - அழகிய மலரனைய சிவந்த அடிகளை உட்கொண்டு யாம் தொழுவோம்.

   (வி - ம்.) வானவர் இவனைத் தொழுதபடி இதுமுதல் மூன்று செய்யுளிற் கூறினார்.

   காதிநான்காவன ஞானாவரணீயம் முதலியன. அவை 'புணரிபோல்: என்னும் (சீவக. 3081) செய்யுளிற் கூறப்பட்டன. நான்மையாவன' அநந்தஞானம், அநந்த தரிசனம், அநந்த வீரியம், அநந்த சுகம்,

( 494 )