| முத்தி இலம்பகம் |
1746 |
|
|
| 3093 |
முழங்குகட னெற்றிமுளைத் தெழுந்தசுடரேபோ | |
| |
லழுங்கல்வினை யலறநிமிர்ந் தாங்குலக மூன்றும் | |
| |
விழுங்கியுமி ழாதுகுணம் வித்தியிருந் தோய்நின் | |
| |
னிழுங்கில்குணச் சேவடிக ளேத்தித்தொழ தும்யாம். | |
| |
|
|
(இ - ள்.) முழங்கு கடல் நெற்றி முளைத்து - முழக்குங் கடலின் உச்சியிலே தோன்றி; எழுந்த சுடரே போல் - எழுந்த ஞாயிரே போல; அழுங்கல் வினை அலர நிமிர்ந்து - இரக்கத்தைத் தரும் தீவினை கெட நிமிர்ந்து; ஆங்கு உலகம் மூன்றும் விழுங்கி-அவ்விடத்து உலகம் மூன்றினையும் உணர்ந்து; உமிழாது குணம் வித்தியிருந்தோய்! - பின்னர் அந்நிலை நீங்காமற் குணத்தை வித்தியிருந்தவனே !; நின் இழுங்கு இல் குணச் சேவடிகள் ஏத்தி யாம் தொழுதும் - நின்னுடைய குற்றமில்லாத பண்புறு சேவடிகளை வாழ்த்தி யாம் தொழுவோம்.
|
|
(வி - ம்.) சுடர் - ஞாயிறு, அழுங்கல் - இரக்கம், இழுங்கு - இழுக்கென்பதன் விகாரம். இழுங்கு - நீங்குதலுமாம்.
|
( 495 ) |
| 3094 |
ஏத்தரிய பல்குணங்கட் கெல்லைவரம் பாகி | |
| |
நீத்தவரு ளிந்திரனை நின்று தொழு தமரர் | |
| |
நாத்தழும்ப வேத்தித்தவ நங்கையவர் நண்ணித் | |
| |
தோத்திரங்க ளோதித்துகண் மாசுதுணிக் கின்றார். | |
| |
|
|
(இ - ள்.) ஏத்த அரிய பல் குணங்கட்கு எல்லை வரம்பு ஆகி - புகழ்தற்கு அரிய பல பண்புகட்குக் சிறுவரம்பின்றிப் பெருவரம்பு ஆகி; நீத்த அருள் இந்திரனை அமரர் தொழுது - பெருக்கத்தையுடைய அருளாளனாகிய இந்திரனை இவ்வாறு வானவர் தொழுது; நாத்தழும்ப ஏத்தி - நாத் தடிப்ப வாழ்த்துகையினாலே; தவ நங்கையவர் நண்ணி-தவம்புரிந்த அரசியராய்த் துறந்தவர்களும் அடைந்து; தோத்திரங்கள் ஓதித் துகள் மாசு துணிக்கின்றார் - வாழ்த்துக்களைக் கூறித் தம் குற்றமாகிய அழுக்கைப் போக்குகின்றார்.
|
|
(வி - ம்.) எல்லைவரம்பு - முடிந்த எல்லை என்றவாறு. நீத்தஅருள் - பெருக்கத்தையுடைய அருள். நீத்தம் - பெருக்கம், இந்திரன் என்றது சீவகனை, முனீந்திரன் என்றவாறு. துகண்மாசு : இருபெயரொட்டு, ஏத்தி - ஏத்துகையினாலே; இது பிறவினை கொண்டது.
|
( 496 ) |
வேறு
|
| 3095 |
செய்தவ னேவினை சேரு மதற்கெனு | |
| |
மையமின் றாயலர் தாமரை மேலடி | |
| |
மொய்ம்மலர் தூய்முனி யாது வணங்குது | |
| |
மெய்யுல கிற்கு விளம்பிய வேந்தே. | |
| |
|