பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1747 

   (இ - ள்.) மெய் உலகிற்கு விளிம்பிய வேந்தே! - உண்மையை உலகிற்குக் கூறிய அரசனே!; செய்தவனே வினைசேரும் அதற்கு எனும் ஐயம் இன்றாய் - வினையைச் செய்தவனே அதனை அடைவான் என்பதற்குச் சிறிதும் ஐயம் இல்லாமல்; அலர் தாமரை மேல் அடி - மலர்ந்த தாமரையின்மேற் சென்ற அடியை; மொய்ம்மலர் தூய் முனியாது வணங்குதும் - மிகுதியான மலர்களைத் தூவி வெறுப்பின்றி வணங்குவோம்.

   (வி - ம்.) 'வினை செய்தவனே அவ் வினையை எய்தும்' என்னும் அதற்கு என்றவாறு. எனும் - சிறிதும், தூய் - தூவி, முனியாது - வெறாதே. வணங்குதும் - வணங்குவேம், மெய் : ஆகுபெயர்; மெய்ப்பொருள் என்க.

( 497 )
3096 நல்லன வேயென நாடி யோர்புடை
யல்லன வேயறை கின்றபுன் னாதர்கள்
பல்வினைக் கும்முலைத் தாய்பயந் தாரவர்
சொல்லுவ நீசுக தாவுரை யாயே.

   (இ - ள்.) சுகதா! - நலந்தருவோனோ! ; நல்லனவே என நாடி - நல்ல பொருள்களே என்று ஆராய்ந்து ; ஓர்புடை அல்லனவே அறைகின்ற புன் ஆதர்கள் - ஒரு கூற்றிலே தீயனவாகிய பொருள்களையே சாற்றுகின்ற புல்லறிவினையுடைய பரசமயிகள், பல்வினைக்கும் முலைத்தாய் பய்ந்தார் - பல்வினைகளையும் வளர்த்தற்குச் செவிலித்தாயை உண்டாக்கிவிட்டார்; அவர் சொல்லுவ நீ உரையாய் - அவர் கூறுவனவற்றை நீ கூறாய்!

   (வி - ம்.) செவிலியைப் பயந்தாரென்றார் அவர் கூறிய ஆகமங்களிலே இருவினை கெடுக்குமாறு கூறிற்றிலரென்று கருதி.

( 498 )
3097 மதியறி யாக்குணத் தோனடி வாழ்த்தி
நிதியறை போனிறைந் தார்நிக ரில்லாத்
துதியறை யாத்தொழு தார்மலர் சிந்தா
விதியறி யும்படி வீரனை மாதோ.

   (இ - ள்.) நிதி அறைபோல் நிறைந்தார் - செல்வக் கருவூலம் போலக் கேள்வியயாற் பரமாகமங்கள் நிறைந்த தேயிர்; மதியறியாக் குணத்தோன் அடி வாழ்த்தி - மதிஞானத்தால் அறிய ஒண்ணாத பண்பினோன் அடியை வாழ்த்தி; நிகர் இல்லாத் துதி அறையா - ஒப்பற்ற வாழ்த்துக் கூறி; மலர்சிந்தா - மலரைத் தூவி; விதி அறியும்படி - இருவினையை அறிய வேண்டி; வீரனைத் தொழுதார் - அவ் வீரனை வணங்கினர்.

   (வி - ம்.) மதி - அறிவு, நிதியறை - கருவூலம், அறையா, சிந்தா, என்பன செய்யா என்னும் வாய்பாட்டு வினையெச்சங்கள். துதி - வாழ்த்து. மாது, ஓ : அசைகள்.

( 499 )