நாமகள் இலம்பகம் |
175 |
|
இருத்தி - (நீ) இந்நிலை கண்டும் இவ்வுடலைவிட்டு நீங்காமல் இருக்கின்றாய்!; ஏற்று! - இஃது எவ்வளவு கொடிது!
|
|
(வி - ம்.) மகனையும் உயிரையும் தனித்தனியே முன்னிலைப்படுத்திக் கூறினாள். மற்று: வினைமாற்று.
|
|
பற்றாமன்னன் - பகைமன்னன், ஆல்: அசைகள், எற்று - எத்தகைய கொடுமைத்து.
|
( 281 ) |
311 |
பிறந்த நீயும் பூம்பிண்டிப் |
|
பெருமா னடிகள் பேரறமும் |
|
புறந்தந் தென்பாற் றுயர்க்கடலை |
|
 நீந்தும் புணைமற் றாகாக்காற் |
|
சிறந்தா ருளரேல் உரையாயாற் |
|
சிந்தா மணியே கிடத்தியான் |
|
மறங்கூர் நுங்கோன் சொற்செய்தேன் |
|
மம்மர் நோயின் வருந்துகோ. |
|
(இ - ள்.) சிந்தாமணியே! - சிந்தாமணியே!; கிடத்தி - (நீ ஒன்றும் உரையாமற்) கிடக்கின்றனை; பிறந்த நீயும் - (என் வருத்தம் நீக்கப்) பிறந்த நீயும்; பூமபிண்டிப் பெருமான் அடிகள் பேரறமும் - மலர்ந்த அசோகின் நிழலில் அமர்ந்த அருகனார் அருளிய பெரிய அறமும்; புறந்தந்து - ஆதரவு செய்து; என்பால் துயர்க்கடலை நீந்தும் புணை ஆகாக்கால் - என்னிடந் தோன்றிய துயரக்கடலை யான் கடக்கும் தெப்பம் ஆகாவிட்டால்; சிறந்தார் உளரேல் உரையாய். நின்னினும் அப்பொருமானினும் சிறந்தவர் இருப்பரேல் உரைத்திடாய்; மறம்கூர் நும்கோன் சொல் செய்தேன் மம்மர் நோயின் வருந்துகோ? - வீரம்மிக்க நும் இறைவன் கூறியதைச் செய்த நான் மயக்க நோயினால் வருந்துவேனோ?
|
|
(வி - ம்.) சொல்: கருவியாகுபெயர். வருந்துகு: வருந்துவேன், தனித்தன்மை வினைமுற்று. பேரறப் பூம்பிண்டிப் பெருமானடிகள் என மாறுவர் நச்சினார்க்கினியர்.
|
( 282 ) |
312 |
அந்தோ விசயை பட்டனகொண் |
|
டகங்கை புறங்கை யானாற்போற் |
|
கந்தார் களிற்றுத் தங்கோமான் |
|
 கழிய மயிலோர் மயிலூர்ந்து |
|
வந்தாற் போலப் புறங்காட்டுள் |
|
வந்தா டமியே யெனமரங்கள் |
|
சிந்தித் திரங்கி யழுவனபோற் |
|
பனிசோ் கண்ணீர் சொரிந்தனவே. |
|