| முத்தி இலம்பகம் |
1750 |
|
|
|
இகல் - மாறுபாடு. முழுமுதல் - பெரிய வடிவு. துமிய - கெட. பகல் - ஒளி, பருதி - ஞாயிறு, மரைமலர் - தாமரைமலர். இகல் அடி என இயைத்து இருவினையோடு இகலும் அடி என்க. கருவினை - தீவினை.
|
( 503 ) |
வேறு
|
| 3102 |
மீன்றயங்கு திங்கண் முகநெடுங்கண் மெல்லியலார் | |
| |
தேன்றயங்கு செந்நாவிற் சின்மென் கிளிக்கிளவி | |
| |
வான்றயங்கு வாமன் குணம்பாட வாழியரோ | |
| |
கான்றயங்கி நில்லா கருவினைகாற் பெய்தனவே. | |
| |
|
|
(இ - ள்.) மீன் தயங்கு திங்கள் முகம் நெடுங்கண் மெல் இயலார் - மீன் திரளிடையே விளங்கும் திங்கள் போலும் முகமும் நீண்ட கண்களுமுடைய அரசியர்; தேன் தயங்கு செம் நாவின் சின்மென் கிளிக்கிளவி - இனிமை விளங்கும் நல்ல நாவினின்று வரும் சில மெல்லிய கிளிமொழி போலும் மொழியாலே; வான் தயங்கு வாமன் குணம் பாட - வானத்தின்கண்ணே விளங்கா நின்ற வாமனுடைய குணத்தைப் பாட; கருவினை தயங்கி நில்லா கான்கால் பெய்தன - அவர்களின் தீவினைகள் அசைந்து நில்லா வாய்க் காட்டின்கண்ணே ஓடின.
|
|
(வி - ம்.) மெல்லியலார் என்றது காந்தருவதத்தை முதலியவரை. மீன் தயங்கு திங்கள் என்றது வாளா உவமையடை மாத்திரை. வான் ; ஆகுபெயர்; வானவர். கான் - காடு, கால்பெய்தல் - ஓடுதல், 'வானிலுள்ளாரும் அசையும் வாமன் குணம்' என்பர் நச்சினார்க்கினியர்.
|
( 504 ) |
வேறு
|
| 3103 |
மதியம்பொழி தீங்கதிர்கள் பருகிமல ராம்பல் | |
| |
பொதியவிழ்ந்து தேன்றுளிப்ப போன்றுபொரு வில்லார் | |
| |
விதியிற்களித் தாரறிவன் விழுக்குணங்க ளேத்தித் | |
| |
துதியிற்றெழு தார்துளங்கு முள்ளமது நீத்தார். | |
| |
|
|
(இ - ள்.) மதியம் பொழி தீ கதிர்கள் பருகி - திங்கள் பொழியும் இனிய கதிர்களைப் பருகி; மலர் ஆம்பல் பொதி அவிழ்ந்து தேன்துளிப்ப போன்று -மலரும் ஆம்பல் மிக விரிந்து, தேன் துளித்தல்போல; பொரு இல்லார்-ஒப்பில்லாத அவ்வரசியர்; துளங்கும் உள்ளம் அது நீத்தார் - தீவினை கெடுதலின் கலங்கும் உள்ளத்தினின்றும் விலகினார்; விதியின் களித்தார்-அவன் கூற்றினைக் கேட்டுக் களித்தார்; அவன் விழுக்குணங்கள் ஏத்தித் துதியின் தொழுதார் - அறிவனின் சிறந்த பண்புகளைப் போற்றி வாழ்த்தித் தொழுதார்.
|