பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1755 

வானிலிருந்து பூமழை சொரிய; வீங்கு பால் தௌ் நிலாத் திருமதி சொரிய - மிகுதியான பால்போன்ற தௌ்ளிய நிலவை அழகிய திங்கள் பொழிய; தேம் அலர் மண்ணின்மேல் - திசைகளிற் பரவிய மண்ணின்மேல்; மழ கதிர் நடப்பது ஒத்தது - இளஞாயிறு திரியும் தன்மையை ஒத்தது.

   (வி - ம்.) பொழியச் சொரியத் திரிவதொரு ஞாயிறு : இல்பொருளுவமை. மதி - குடை. இளஞாயிறு இருளைக்கெடுத்து உலகை அளித்தாற்போல, இவனும் மக்களின் மனத்திருளைக் கெடுத்து அறக்கதிரைப் பரப்புகின்றான் என்பதாம்.

( 514 )

வேறு

3113 பான்மிடை யமிர்து போன்று
  பருகலாம் பயத்த வாகி
வானிடை முழக்கிற் கூறி
  வாலற வமிர்த மூட்டித்
தேனுடை மலர்கள் சிந்தித்
  திசைதொழச் சென்ற பின்னாட்
டானுடை யுலகங் கொள்ளச்
  சாமிநாள் சார்ந்த தன்றே.

   (இ - ள்.) பால் மிடை அமிர்து போன்று - கூறுபாடு நெருங்கின அமிர்தம் போன்று; பருகலாம் பயத்த ஆகி - பருகுமியல்பினவாகி; வானிடை முழக்கின் கூறி - வானில் இடிபோலக் கூறி; வால் அற அமிழ்தம் ஊட்டி - தூய அறமாகிய அமிழ்தை உண்பித்து; திசை தேன் உடை மலர்கள் சிந்தித் தொழச் சென்ற பின் நாள் - திசையெங்கும் தேனுடைய மலர்களைச் சிதறித் தொழப் போன பிறகு; தான் உடை உலகம் கொள்ள - (தவத்தாலே) தனக்குரிமையாகிய வீட்டை அடைய; சாமி நாள் சார்ந்தது - சீவகசாமியின் நாள் சேர்ந்தது.

   (வி - ம்.) என்றது வீடுபெறக் கற்பித்த காலம் வந்தது என்றவாறு.

   பால் - கூறுபாடு. கூறுபாடு நெருங்கின அமிர்து என்றது கேட்போர் உணர்விற்கும் அவர் நிற்கின்ற நிலைக்குமேற்பக் கூறுபாடுடைய அறங்கள் என்றற்கு. வாலிதாய் எல்லாரும் அறியப்படுகின்ற அறம் என்க. தானுடையுலகம் - தான் முன்பு செய்த தவத்தாலே தனதாகிய வீடு என்க.

( 515 )
3114 உழவித்தி யுறுதி கொள்வார்
  கொண்டுய்யப் போகல் வேண்டித்
தொழுவித்தி யறத்தை வைத்துத்
  துளங்கிமி லேறு சோ்ந்த