பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1756 

3114 குழவித்தண் டிங்க ளன்ன
  விருக்கைய னாகிக் கோமான்
விழவித்தாய் வீடு பெற்றான்
  விளங்கிநால் வினையும் வென்றே.

   (இ - ள்.) உழவு வித்தி உறுதி கொள்வார் - உழவுத் தொழிலைப் பரப்பி அதன் பயனைக் கொள்ள வல்லார்; கொண்டு உய்யப் போகல் வேண்டி - கொண்டு பிறவியைத் தப்பிப்போகலைத் தான் விரும்பு; தொழு வித்தி அறத்தை வைத்து - சமவ சரணத்தே அறத்தை உண்டாக்கி வைத்து; துளங்கு இமில் ஏறு சேர்ந்த தண் குழவித் திங்கள் அன்ன இருக்கையன் ஆகி - அசையும் இமிலையுடைய விடையோரைச் சேர்ந்த தண்ணிய பிறைத் திங்கள்போன்ற பல்லியங்காசனத்தை யுடையவனாய்; விளங்கி விழவித்தாய் நால்வினையும் வென்று கோமான் வீடு பெற்றான் - விளங்கி விழவுக்குக் காரணமாய் நால்வினையையும் வெற்றி கொண்டு சீவகன் வீடுபெற்றான்.

   (வி - ம்.) உழவு - வழிபாடு. ஏறு சேர்ந்த திங்கள் - இடப ஓரையைச்சேர்ந்த திங்கள் : வைகாசி. வைகாசிப் பிறைபோன்ற இருக்கை என்க. நால்வினை : பின்பு நின்ற வேத நீயம், ஆயுஷ்யம், நாமம், கோத்திரம் என இவை.

( 516 )
3115 துந்துபி கறங்க வார்த்துக்
  துகிற்கொடி நுடங்க வேந்தி
யந்தரம் விளங்க வெங்கு
  மணிகமூர்ந் தமர ரீண்டி
வந்துபொன் மாரி சிந்தி
  மலர்மழை சொரிந்து சாந்துங்
கெந்தநா றகிலுங் கூட்டிக்
  கிளர்முடி யுறுத்தி னாரே.

   (இ - ள்.) துந்துபி கறங்க - வாச்சியம் ஒலிக்க; ஆர்த்துத் துகிற்கொடி நுடங்க ஏந்தி - ஆரவாரத்துடன் துகிற்கொடியை அசைய எடுத்து; அந்தரம் எங்கும் விளங்க - வானம் எங்கும் விளக்கம் உற; எங்கும் அமரர் அணிகம் ஊர்ந்து ஈண்டி வந்து - எவ்விடத்தும் வானவர் தம் ஊர்தியில் ஏறிக் குழுமி வந்து; பொன்மாரி சிந்தி - பொன்மழை பொழிந்து; மலர் மழை சொரிந்து - பூமாரி பெய்து; சாந்தும் கெந்தம் நாறு அகிலும் கூட்டி - சந்தனத்தையும் மணங்கமழும் அகிற்புகையையுஞ் சேர்த்து; கிளர்முடி உறுத்தினார் - விளங்கும் முடியை வைத்து வணங்கினார்.