பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1757 

   (வி - ம்.) நுடங்க - அசைய. அணிகம் - ஊர்திகள். கெந்தம் - நறுமணம். அகில் : ஆகுபெயர். கிளர்முடி : வினைத்தொகை.

( 517 )
3116 முளைத்தெழு பருதி மொய்கொண்
  முழங்கழற் குளித்த தேபோற்
றிளைத்தெழு கொடிகள் செந்தீத்
  திருமணி யுடம்பு நுங்க
விளைத்தபின் விண்ணு மண்ணு
  மங்கலம் வகையிற் செய்து
வளைப்பொலி கடலி னார்த்து
  வலங்கொண்டு நடந்த வன்றே.

   (இ - ள்.) முளைத்து எழு பருதி மொய் கொள் முழங்கு அழல் குளித்ததேபோல் - (கீழ்த்திசையிலே) தோன்றி எழுகின்ற ஞாயிறு மிகுதியான நெருப்பிலே முழுகினாற்போல; திளைத்து எழு செந்தீக் கொடிகள் - பயின்று எழு செந்தீயின் கொடிகள்; திருமணி உடம்பு நுங்க - அழகிய மாணிக்கம் போன்ற உடம்பை விழுங்க; விளைத்த பின் - அதனை முடித்த பிறகு; விண்ணும் மண்ணும் மங்கலம் வகையின் செய்து - வானவரும் மண்ணவரும் முத்தி என்னும் திருமணத்தை முறைப்படி யியற்றி; வளைப்பொலி கடலின் ஆர்த்து - சங்கினால் விளக்கமுற்ற கடலைப்போல ஆரவாரித்து; வலம் கொண்டு நடந்த - வலஞ்செய்து போயினார்.

   (வி - ம்.) கர்ப்பாவதரணம், ஜன்மாபிஷேகம், பரிநிஷ்கிரமணம், கேவல ஞானம், பரிநிர்வாணம் என்னும் ஐந்து மங்கலங்களுள் பரிநிர்வாணம் என்னும் முத்தி ஒன்றாகும்.

( 518 )
3117 கேவல மடந்தை யென்னுங்
  கேழ்கிளர் நெடிய வாட்கட்
பூவலர் முல்லைக் கண்ணிப்
  பொன்னொரு பாக மாகக்
காவலன் றானொர் கூறாக்
  கண்ணிமை யாது புல்லி
மூவுல குச்சி யின்பக்
  கடலினுண் மூழ்கி னானே.

   (இ - ள்.) கேழ் கிளர் நெடிய வாள் கண் - ஒளி விளங்கும் நீண்ட வாளனைய கண்களையும்; பூ அலர் முல்லைக் கண்ணி - மலராக அலர்ந்த முல்லைக் கண்ணியையும் உடைய; கேவல மடந்தை என்னும் பொன் ஒரு பாகம் ஆக - கேவல ஞானமென்