பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1761 

 

   (இ - ள்.) கலவி ஆகிய காமத்தின் பயன் - கலவியால் உண்டாகிய காமத்தின் பயன்; புலவி ஆதலால் - புலவியே ஆகையால்; பொன் அம் கொம்பனார் - பொற் கொம்பு போன்ற அவர்கள்; உலவு கண் மலர் ஊடல் செவ்வி நோக்கு - உலாவுகின்ற கண் மலர்களால் ஊடிப் பார்த்ததொரு தகுதியான நோக்கம்; இலைகொள் பூணினார் இதயம் போழ்ந்தது - இலை வடிவப் பூணினாரின் உள்ளத்தைப் பிளந்தது.

   (வி - ம்.) ”உணலினும் உண்ட தறல் இனிது காமம்

புணர்தலின் ஊடல் இனிது” (குறள் - 1326)

   என்பதுபற்றிக் ”கலவியாகிய காமத்தின்பயன் புலவி” என்றார். கலவி - புணர்தல். புலவி - ஊடுதல்.

( 525 )
3124 பூவி னுள்ளவள் புகுந்து முள்ளத்தா
ணாவிற் பெண்பெயர் நிவிற்றி னீரெனக்
காவிக் கண்கடை யிடுகக் காற்சிலம்
பாவித் தார்த்தன வம்மென் குஞ்சியே.

   (இ - ள்.) பூவின் உள்ளவள் புகுந்து உம் உள்ளத்தாள் - செந்தாமரையாள் வந்து உம் உள்ளத்திருந்தான்; நாவின் பெண் பெயர் நவிற்றினீர் என - நாமகளையும் வாக்காற் கூறினீர் என்று; காவிக் கண் கடை இடுக - காவியனைய கண்கள் (புலந்து) இடுகி நோக்க; கால் சிலம்பு அம்மென் குஞ்சி ஆவித்து ஆர்த்தன - காற்சிலம்புகள் அழகிய மெல்லிய சிகையிலே வாய்விட்டு ஒலித்தன.

   (வி - ம்.) இது புலவி நுணுக்கம். பூவின் உள்ளாள் என்றது திருமகளை. உம் - நும். நாவிற்பெண் : கலைமகள். வாக்காற் கூறுதலாவது, பேசுதலானே தாம் கலைமகள் அருளுடையர் என்பது கேட்போர்க்குப் புலனாக்குதல்.

( 526 )
3125 நெஞ்சி னேரிழை வருந்து மென்றுபூங்
குஞ்சி யேற்றது குறிக்கொ ணீயெனாப்
பஞ்சின் மெல்லடிப் பாவை பூநுதா
லஞ்சி னார்க்கதோர் தவற தாகுமே.

   (இ - ள்.) பாவை! பூ நுதால்! - பாவையே! அழகிய நெற்றியை உடையவளே!; பஞ்சின் மெல் அடி - நின் பஞ்சனையமெல்லிய அடி; நெஞ்சின் நேர் இழை வருந்தும் என்று - மார்பிற் பட்டால் (அவை) அழகிய பூணாலே வருந்தும் என்று; பூங்குஞ்சி ஏற்றது - அழகிய எம் தலைமயிர் ஏற்றது; நீ குறிக்கொள் எனா - நீ குறித்துப் பார்த்துக்கொள் என்று; அஞ்சி