பக்கம் எண் :

முத்தி இலம்பகம் 1763 

   குழையை நக்க' அதனை உணர்ந்து கோலம் புனைந்தனர் என்று கூட்டுவர்.

( 529 )
3128 செய்த நீர்மையார் செயப்பட் டார்கடா
மெய்தி யாவையும் முணர்க வென்பபோன்
மைய வாங்குழன் மடந்தை குண்டல
நைய நின்றெலா நாண நக்கவே.

   (இ - ள்.) செய்த நீர்மையார் செயப்பட்டார்கள் தாம் எய்தி - மண்ணுலகிலே சீவகனிடம் ஊடியவர் வானுலகிலே அரம்பையர்களால் ஊடப்பட்டவர்களாக அப்பயனை அடைந்து; யாவையும் உணர்க என்பபோல - ஊடல் துன்பத்தையும் கூடல் இன்பத்தையும் உணர்க என்பபோல்; மை அவாம் குரல்மடந்தை குண்டலம் - கருமை பொருந்திய கூந்தலையுடைய மடந்தையின் குண்டலங்கள்; எலாம் நைய நின்று நாண நக்க - தம்மையொழிந்த அணிகள் நைந்து நாணத் (தாம் மட்டும்) நக்கன.

   (வி - ம்.) செய்த நீர்மையார் தாம் பாவையும் எய்திச் செயப்பட்டார்கள் என்பபோல் நக்க என்று கூட்டி, முற்பிறப்பில் பிறரை மதியாமற் செய்த தன்மையை உடையவர்கள்தாம் இப்பிறப்பில் தம்மைவந்து அவை எய்துகையினாலே, இப்பொழுது பிறராற் பராமற் செய்யப்பட்டார்களென்று கூறுவனபோலக் குண்டலம் நக்க என்றவாறு. இதுதற்குறிப்பேற்றம். தம்மை ஒழிந்தன எல்லாம் இங்ஙனம் நகாதே நின்று நாணா நிற்க நையாநிற்கத் தாம் நக்கன என்க. என்றது, தேவிமார் முற்பவத்திற் பிள்ளையார் முடியை மிதித்த வினைப்பயத்தால் தாங்களும் இப் பவத்து மிதியுண்டாரென்றவாறு.

   இவளை என்றும் மடந்தையென்றும் ஒருமையாற் கூறினாரேனும், 'ஒருபாற் கிளவி யேனைப்பாற் கண்ணும் - வருகைதானே வழக்கென மொழிப' (தொல். பொருளியல், 28) என்னும் பொருளியல் வழுவமைதியாற் பன்மை கூறிற்றென்று உணர்க.

( 530 )
3129 செல்வக் கிண்கிணி சிலம்பத் தேன்சொரி
முல்லைக் கண்ணிகள் சிந்த மொய்ந்நலம்
புல்லிப் பூண்டதார் புரள மேகலை
யல்குல் வாய்திறந் தாவித் தார்த்தவே.

   (இ - ள்.) செல்வக் கிண்கிணி சிலம்ப - செல்வமுற்ற கிண்கிணிகள் ஒலிக்க; தேன் சொரி முல்லைக் கண்ணிகள் சிந்ததேனைச் சொரியும் முல்லைக் கண்ணிகள் மலர்களைச் சிந்த; தார் புரள - மாலைகள் புரள; மொய்ந் நலம் புல்லி - மிக்க நலத்தை நுகர்தலாலே; அல்குல் பூண்ட மேகலை வாய் திறந்து ஆவித்து ஆர்த்த - அல்குலினிடத்தே பூண்ட மேகலை மணிகள் வாய் திறந்து கொட்டாவி விட்டு ஆர்த்தன.