| முத்தி இலம்பகம் |
1768 |
|
|
| 3137 |
ழெழுதார் மணிக்குவளைக் கண்வலையுட்பட் | |
| |
டிமையார்கள் காமமறு சுழியுளாழ்ந் | |
| |
திழுதார்மென் பள்ளிப்பூந் தாதுபொங்க | |
| |
விருவர் பலராகி யின்புறுபவே. | |
| |
|
|
(இ - ள்.) அலர்ந்த கற்பகத்தின்கீழ் இழுது ஆர் பூமென் பள்ளி - மலர்ந்த கற்பகத்தின் நிழலிலே தேனார் மலர் நிறைந்த மென் பள்ளியிலே; ஆரம் முழுதும் மின்னும் முலைக்குவட்டினால் - முத்துமாலை முற்றும் மின்னும் முலைக்குவட்டினாலே; மொய்ம் மார்பின் குங்குமச் சேறு இழுக்கி வீழ - இன்பம் நிறை மார்பிலே குங்குமச் சேறு அழிந்து கெட; உழுது - உழுது; ஆர்வம் வித்தி - ஆசையை விதைத்து; உலப்பு இலாத நுகர்ச்சி விளைத்து - கெடாத இன்பத்தை விளைத்தலாலே; எழுது ஆர் மணிக்குவளைக் கண்வலையுட் பட்டு - மை எழுதுகின்ற நிறைந்த நீலமணிபோலும் குவளைக் கண்வலையிலே பட்டு; இமையார்கள் - இமையாராய்; காமம் மறு சுழியுள் ஆழ்ந்து - காமம் சுழலும் சுழியிலே ஆழ்ந்து; பூந்தாது பொந்து - பூந்தாது பொங்க; இருவர் பலராகி இன்புறுப - ஆணும் பெண்ணுமாகிய இருவரும் பலப்பல உருவங்களைக் கொண்டு இன்புறுவர்.
|
|
(வி - ம்.) ஆரம் - முத்துமாலை. குங்குமச் சேற்றை உழுது என்க. ஆர்வம் ஆகிய விதையை வித்தி என்க. நுகர்ச்சி - இன்பம். எழுது - எழுதுதல். மணி - நீலமணி. இழுது - தேன். இருவர் பலராகி என்றது ஆடவரும் மகளிருமாகிய அத்தேவர்கள் பற்பல வேடங் கொண்டவராய் என்றவாறு.
|
( 539 ) |
| 3138 |
மண்கனிந்த பொன்முழவ மழையின் விம்ம | |
| |
மாமணியாழ் தீங்குழல்க ளிரங்கப் பாண்டில் | |
| |
பண்கனியப் பாவைமார் பைம்பொற் றோடுங் | |
| |
குண்டலமுந் தாம்பதைப்ப விருந்துபாட | |
| |
விண்கனியக் கிண்கிணியுஞ் சிலம்பு மார்ப்ப | |
| |
முரிவுருவ வேனெடுங்கண் விருந்து செய்யக் | |
| |
கண்கனிய நாடகங்கண் டமரர்காமக் | |
| |
கொழுந்தீன்று தந்தவந்தா மகிழ்ந்தா ரன்றே. | |
|
|
(இ - ள்.) மண் கனிந்த பொன் முழவல் மழையின் விம்ம - மண்ணிட்ட பொன் முழவம் முகிலென முழங்க; மாமணி யாழ் தீ குழல்கள் பாண்டில் இரங்க - பெரிய மணிகள் இழைத்த வாழும் இனிய குழல்களும் தாளமும் ஒலிக்க;' பாவைமார் பைம்பொன் தோடும் குண்டலமும் தாம் பதைப்ப - பாவையர் பொற்றோடும் குண்டலமும் பதைக்க; இருந்து பண்கனிய பாட
|