பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 177 

   இதன்கண் இறந்துபட்ட சச்சந்தனுக்கு ஞாயிறும், இடர்கொள் நெஞ்சத்து விசயைக்கு அந்திப் பொழுதும், சீவகனுக்குப் பிறையும் உவமைகள். இவ்வுவமைகள் நினைந்து நினைந்து இன்புறற்பாலன.

( 284 )

வேறு

 
314 தேனமர் கோதை மாதர்
  திருமகன் றிறத்தை யோராள்
யானெவன் செய்வ லென்றே
  யவலியா விருந்த போழ்திற்
றானமர்ந்த துழையி னீங்காச்
  சண்பக மாலை யென்னுங்
கூனிய துருவங் கொண்டோர்
  தெய்வதங் குறுகிற் றன்றே.

   (இ - ள்.) தேன்அமர் கோதை மாதர் திருமகன் திறத்தை ஓராள் - தேன்பொருந்திய மாலையணிந்த விசயை தன் அருமை மகனின் நல்வினையை அறியாமல்; யான் எவன் செய்வல் என்று அவலியா இருந்த போழ்தில் - நான் யாது செய்வேன் என்று வருந்தியிருந்த அளவில்; தான் அயர்ந்து உழையின் நீங்காச் சண்பகமாலையென்னும் கூனியது உருவம்கொண்டு - தான் எப்போதும் அருகிலே யிருக்கும் இயல்பினளான சண்பகமாலை யென்னும் பெயரையுடைய கூனியின் வடிவங்கொண்டு; ஓர் தெய்வதம் குறுகிற்று - ஒரு தெய்வம் விசயையை அடைந்தது.

 

   (வி - ம்.) இவன் அரசன் மகனாதலின், அச்சுடுகாட்டில் உறையும் தெய்வம் வந்தது. தெய்வதம் தைவதமென்னும் வடமொழிச் சிதைவு.

( 285 )

315 விம்முறு விழும வெந்நோ
  யவணுறை தெய்வஞ் சேரக்
கொம்மென வுயிர்த்து நெஞ்சிற்
  கொட்புறு கவலை நீங்க
வெம்மனை தமியை யாகி
  யிவ்விட ருற்ற தெல்லாஞ்
செம்மலர்த் திருவின் பாவா
  யான்செய்த பாவ மென்றாள்.

   (இ - ள்.) அவண்உறை விம்முறு விழும வெந்நோய் தெய்வம் சேர - அங்கு வாழ்கின்ற, விசயை கொண்ட விம்மலுக்குரிய துன்பத்திற் கிரங்கித் துயர்கொண்ட தெய்வம் வந்தவுடன்; கொம் என உயிர்த்து நெஞ்சில் கொட்புறு கவலைநீங்க - விரைவில் பெரு