| முத்தி இலம்பகம் | 
1772  | 
 | 
  | 
| 
 போல் கோத்து - வடம்போல் கோத்து ; திருவில் உமிழ்ந்து வீசும் சிந்தாமணி - வானவில்போல ஒளி உமிழ்ந்து வீசும் சிந்தாமணி என்னும் இச் செய்யுளை; ஓதி உணர்ந்தார் கேட்டார் - ஓதி உணர்ந்தாரும் அவர் கூறக்கேட்டாரும்'; இந் நீரார்ல் உயர்வர் இந்திரராய்ப் பின் வீடுபெறுவர்; ஏந்து பூந்தாமரையாள் காப்பாள் ஆம் - உயர்ந்த தாமரை மலராள் காப்பாள் ஆகும். 
 | 
| 
    (வி - ம்.) மெய்நீர் - (முத்துக்கு) மெய்யிடத்து நீர்; (நூலுக்கு) உண்மையான பொருளின் நீர்மை. செந்நீர்த் திரள்; சிவந்த நீர்மையை உடைய மாணிக்கத்திற்கு ஆகுபெயர். இம் முத்தையும் மாணிக்கத்தையும் ஈன்ற வலம்புரி : இல்பொருளுவமை. 
 | 
| 
    இச் செய்யுள் இந் நூலாசிரியரின் ஆசிரியர் கூறியது: இங்ஙனம் நூலாசிரியர் தம்மைப் புனைந்துரைத்தல் ஆகாமையின் முத்தும் மணியும் கோத்தாற் போன்றதென்றார், எளிதிற் பொருள் தந்தும், அரிதிற் பொருள் தந்தும் நிற்றலின். இருபத்தேழென்றார், ஒன்றைப் பத்தாற்பெருக்கின இரு நூற்றதெழுபதைப் பத்தாற் பெருக்கின இரண்டாயிரத்தெழு நூற்றை; எனவே, தேவர் அருளிச்செய்த செய்யுள், இரண்டாயிரத்தெழுநூறென்றே கொள்க. 
 | 
| 
    [மற்றை445-செய்யுட்களும் கந்தியார் என்னும்பெண் புலவரால் இடையிடையே பாடிச் சேர்க்கப்பட்டன என்று சிலர் கூறுகின்றனர். அச் செய்யுட்கள் எவையோ? இதுகாறும் கந்தியார் பாட்டிவையென்று காண்டலெவர்க்கும் அரிதாம்.] 
 | 
( 1 ) | 
வேறு
 | 
|  3144 | 
செந்தா மரைக்குச் செழுநாற்றங் கொடுத்த தேங்கொ |   |  
|   | 
ளந்தா மரையா ளகலத்தவன் பாத மேத்திச் |   |  
|   | 
சிந்தா மணியின் சரிதஞ்சி தர்ந்தேன் றெருண்டார் |   |  
|   | 
நந்தா விளக்குச் சுடர்நன்மணி நாட்டப் பெற்றே. |   |  
|   | 
 
 
 | 
| 
    (இ - ள்.) செந்தாமரைக்குச் செழுநாற்றம் கொடுத்த - செந்தாமரைக்கு நல்ல நாற்றத்தைக் கொடுத்த; தேன்கொள் அம் தாமரை - தேன் கொண்ட அழகிய இறைவன் திருவடிகள்; ஆள் அகலத்தவன் பாதம் ஏத்தி - ஆள்கின்ற விரிந்த ஞானத்தையுடையவனாகிய குருக்களின் திருவடிகளை வாழ்த்தி; சிந்தாமணியின் சரிதம் சிதர்ந்தேன் - சிந்தாமணியின் வரலாற்றைப் பரக்கக் கூறினேன்; நந்தா விளக்குச் சுடர் நன்மணி நாட்டப் பெற்று - அவியாத விளக்காகிய எரிகின்ற நல்ல மணியின் அருள் நாட்டப் பெற்று; தெருண்டார் - இவ்வுலகோர் நன்றென்று தெளிந்தார். 
 | 
| 
    (வி - ம்.) இது நூலாசிரியர் கூற்று; நச்சினார்க்கினியர், 'அகலத்தவன் சீவகன்' என்பார். 'அகலத்தவன் சரிதம் சிந்தாமணி சிதர்ந்தேன்' என்று கூட்டுவர். 
 | 
( 2 ) |