| முத்தி இலம்பகம் |
1773 |
|
|
வேறு
|
| 3145 |
செய்வினை யென்னு முந்நீர்த் | |
| |
திரையிடை முளைத்துத் தேங்கொண் | |
| |
மைவினை மறுவி லாத | |
| |
மதியெனுந் திங்கண் மாதோ | |
| |
மொய்வினை யிருள்கண் போழு | |
| |
முக்குடை மூர்த்தி பாதங் | |
| |
கைவினை செய்த சொற்பூக் | |
| |
கைதொழு தேத்தி னேனே. | |
|
|
(இ - ள்.) செய்வினை என்னும் முந்நீர்த் திரையிடை-நல்வினை என்னும் கடலிலே; முளைத்து- தோன்றி; தேன் கொள் மைவினை மறுஇலாத மதி எனும் திங்கள் - இனிமை கொண்ட தீவினையாகிய குற்றம் இல்லாத அறிவு எனும் திங்களாலே; கைவினை செய்த சொல்பூ - ஆராய்ந்த செய்யுளாகிய பூவை; மொய்வினை இருள்கண் போழும் முக்குடை மூர்த்தி பாரதம் -செறிந்த வினையாகிய இருளை அவ்விடத்தே நீக்கும் முக்குடையுடைய இறைவன் திருவடியிலே (இட்டு) ; கைதொழுது ஏத்தினேன் - கையாலே தொழுது ஏத்தினேன்.
|
|
(வி - ம்.) இதுவும் நூலாசிரியராகிய தேவர் கூற்று. நச்சினார்க்கினியர் கூறும் பொருள்:
|
| ”தத்தைகுண மாலையொடு தாவில் புகழ்ப் பதுமை |
|
| ஓத்தவெழிற் கேமசரி ஒண்கனக மாலை |
|
| வித்தகநல் விமலையொடு வெஞ்சுரமஞ் சரிதான் |
|
| அத்தகை யிலக்கணையொ டாகமணம் எட்டே.” |
|
| ”பகைமாற் றொருநற் பரன்வாழ்த் தவைச்சொற் பதிக விலம்பகமே |
|
| வகைமாற் றொருநா மகளோ கோவிந்தை மணமுறு தத்தைகுணம் |
|
| மிகைமாற் பதுமை கேமசரி கனகம் விமலையர் வீழ்சுரமஞ் |
|
| சகைமாற் றொடுமண் மகள்வூ விலக்கணை முத்தியீ ராறொன்றே” |
|
|
இவையிரண்டும் கந்தியார் கூற்று என்பர் நச்சினார்க்கினியர்,
|
( 3 ) |
|
முத்தி இலம்பகம் முற்றிற்று
|
|
சீவகசிந்தாமணி உரை முற்றுப்பெற்றது.
|
வாழ்த்து
|
| |