பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 178 

மூச்சுவிட்டு உள்ளத்திற் சுழன்ற கவலை நீங்குதலால்; எம்அனை செம்மலர்த் திருவின் பாவாய்! - எம் அன்னையே! சிவந்த தாமரைத் தவிசுடைய திருவனைய பாவையே!; தமியை ஆகி இவ் இடர் உற்றது எல்லாம் யான் செய்த பாவம் என்றாள் - நீ தனித்து இத்துன்பம் அடைந்ததெல்லாம் நான் செய்த பாவம் என்று கூனி ஆதரவு கூறினாள்.

 

   (வி - ம்.) திருவின் : இன்: அசை [ஐந்தனுருபு என்பதே பொருத்தமுடையது]. தெய்வம் கூனியாய் நிற்றலின் உயர்திணையாற் கூறினர்.

 

   விழுமம் - துன்பம். கொம்மென: விரைவுக் குறிப்பு. கொட்புறுதல் - சுழலுதல். எம்மன்னை எனற்பாலது எம்மனை என நின்றது. அன்பிற்குரியோர் துன்புறக் காண்புழிக் கண்டோர் இது யான் செய்த பாவம் என்று கூறி யிரங்குதல் பண்டைக்காலத்தொரு வழக்கு. இதனைப் பெருங்கதையில் துன்ப நிலையிலிருந்த உதயணைக் கண்ட சாங்கியத்தாய் ”மாபெருந்தேவி திருவயிற்றியன்ற பெருவிறற் பொலிவே, இனையை யாவது எம்மனோர் வினை” என்றிரங்குதலானும் உணர்க. இந்நூலாசிரியரே ”இனையைநீ யாய வெல்லாம் எம்மனோர் செய்த பாவம்” (391) எனப் பிறாண்டும் ஓதுதல் காண்க

( 286 )
316 பூவினுட் பிறந்த தோன்றற்
  புண்ணிய னனைய நம்பி
நாவினு ளுலக மெல்லா
  நடக்குமொன் றாது நின்ற
கோவினை யடர்க்க வந்து
  கொண்டுபோ மொருவ னின்னே
காவியங் கண்ணி னாயா
  மறைவது கரும மென்றாள்.

   (இ - ள்.) காவிஅம் கண்ணினாய்! - நீல மலரனைய அழகிய கண்ணினாய்!; பூவினுள் பிறந்த தோன்றல் புண்ணியன் அனைய நம்பி - தாமரையில் தோன்றிய தலைமையுற்ற முருகனைப்போன்ற இந்த நம்பியின்; நாவினுள் உலகம் எல்லாம் நடக்கும் - சொல்லினாலே உலக முழுவதும் நடக்கும்; ஒன்றாது நின்ற கோவினை அடர்க்க - பகைத்துநின்ற அரசனைக் கொல்ல; ஒருவன் இன்னே வந்து கொண்டுபோம் - ஒருவன் இப்போதே வந்து இந்நம்பியைக் கொண்டு போவான்; யாம் மறைவது கருமம் என்றாள்- (ஆகையால்) யாம் மறைந்து நிற்பது செய்யத்தக்கதாகும் என்றாள்.

 

   பூவினுட் பிறந்த தோன்றற் புண்ணியன் என்றது முருகக்கடவுளை. ”நிலந்தோங்கு இமயத்து நீலப்பைஞ்சுனைப், பயந்தோர் என்ப பதுமத்துப்