பக்கம் எண் :

பதிகம் 18 

யாயினும் ,'கற்சுனைக் குவளையிதழ்' போல (தொல் - எச்ச. 24 இளம் பூரணர், நச்சினார்க்கினியர் மேற்கோள்) இருசொல் தொகையாய் நின்றது.

 

   கன்னிப்பெண் : விமலை. கண்வாள் : கண்ணொளி.

( 19 )
25 துஞ்சா மணிப்பூட் சுரமஞ்சரி யென்னும் நாமத்
தஞ்சாயல் பூத்த வகிலார்துகி லாய்போ னல்கு
லெஞ்சாத வின்பக் கொடிதாழ்த்ததும் பன்றி யெய்து
நஞ்சூறு வேலான் பகைநாமறக் கொன்ற வாறும்,

   (இ - ள்.) துஞ்சா மணிப்பூண் சுரமஞ்சரி என்னும் நாமத்து - ஒளிமாறாத மாணிக்கப் பூணினையும் சுரமஞ்சரி என்னும் பெயரினையும், அம் சாயல் அகில்ஆர் துகில் ஆய்பொன் அல்குல்- அழகிய சாயலையும் அகில்மணம் நிறைந்த ஆடையும் பொன்னணிகலனும் உடைய அல்குலையும்; பூத்த எஞ்சாத இன்பக்கொடி தாழ்த்தும் - மலர்ந்த, குறையாத இன்பந்தருங் கொடியை வளைத்தபடியும்; நஞ்சூறு வேலான் பன்றி எய்து பகை நாம் அறக் கொன்ற ஆறும்- நஞ்சு தோயும் வேலணிந்த சீவகன் பன்றியை வீழ்த்திப் பகைவனை அச்சம் நீங்கக் கொன்ற படியும்;

 

   (வி - ம்.) துகிலையும் மேகலையையும் உடைத்தாகிய அல்குலையுடைய கொடி; இன்பமாகிய கொடி. பொன்: (கருவி ஆகுபெயா)். கொடி யென்றலானும் (ஆடவரை நோக்காமை மேற்கொண்ட) விரதத்தை நீக்குதலானும் 'தாழ்த்தது' என்றார். நாம் - அச்சம்: உரிச்சொல். நாமம் ஆயின் விகாரமாம்.

( 20 )
26 புண்டோய்த் தெடுத்த பொருவேலெனச் சேந்து நீண்ட
கண்போன்ற மாமன் மகள்கண்மணிப் பாவை யன்ன
பெண்பா லமிர்தின் னலம்பெற்றதும் பொற்பச் செங்கோ
றண்பான் மதிதோய் குடைதண்ணிழற் பாய வாறும்,

   (இ - ள்.) மாமன் கண்போன்ற மகள்-தன் மாமன் கோவிந்தனுக்குக் கண்போன்ற மனைவி புதவியின், புண்தோய்த்து எடுத்த பொருவேல் எனச் சேந்து நீண்ட - புண்ணில் தோய்த்து எடுத்த, போருக்குரிய வேல்போலச் சிவந்த நீண்ட; கண்மணிப் பாவை அன்ன பெண்பால் அமிர்து இன்நலம் பெற்றதும்- கண் மணியிற் பாவைபோன்ற பெண்ணாகிய இலக்கணையிடத்து அமிர்தத்தைப் போன்ற இனிய நலத்தைப் பெற்றபடியும்; செங்கோல் பொற்பத் தண்பால் மதிதோய் குடை தண்நிழல் பாய ஆறும் - செங்கோல் பொலிவு பெற்றிருப்பக் குளிர்ந்த பாலனைய திங்களைப் போன்ற குடை குளிர்ந்த நிழலைப் பரப்பினபடியும்;