| நாமகள் இலம்பகம் |
180 |
|
|
ஆகஎன்று - செய்த அவைகளெல்லாம் நன்றாகுக என்று கூறி; திருமுலைப்பால் மடுத்து - தானே விசயை முலையைப்பற்றிப் பாலூட்டி; காதலான் பெயர் சுமந்த கதிர்மணி ஆழி சேர்த்தி - சச்சந்தன் பெயரெழுதிய ஒளிவிடும் மணியாழிகைக் குழவியின் மீது வைத்து; கோதைதாழ் குழலினாளைக் கொண்டுபோய் மறைய நின்றாள் - பூமாலையணிந்த குழலையுடைய விசயையை அழைத்துக்கொண்டு சென்று மறைய நின்றாள் கூனி.
|
|
|
(வி - ம்.) முற்செய்யுளில் விசயை ஒதுங்குகின்றாள் என்றார். இச் செய்யுளில் அவ்வாறு ஒதுங்கும் விசயையைக் கூனி மறைய அழைத்துச் சென்றாள் என்றார். ஆழிசேர்த்தது அறிந்து வளர்த்தற்கு.
|
|
|
[நச்சினார்க்கினியர், முற்செய்யுளையும் இதனையும் ஒரு தொடராக்கிக் கூனியே நம்பியைப் பள்ளிசேர்த்துத் திருமுலைப்பால் மடுத்து ஆழி சேர்த்தினாள் என்று மாட்டேற்றுவர். அவ்வாறு மாட்டேற்றச் 'சேர்த்தி' என்பதைச் 'சேர்த்த' என்று திரிப்பர்]
|
( 289 ) |
| 319 |
நல்வினை செய்தி லாதே |
| |
னம்பிநீ தமியை யாகிக் |
| |
கொல்வினை மாக்கள் சூழக் |
| |
கிடத்தியோ வென்று விம்மாப் |
| |
புல்லிய கொம்பு தானோர் |
| |
கருவிளை பூத்த தேபோ |
| |
லொல்கியோர் கொம்பு பற்றி |
| |
ஒருகணா னோக்கி நின்றாள். |
|
|
(இ - ள்.) நல்வினை செய்திலாதேன் நம்பி - பெற நல்வினை செய்திருந்தும் வளர்க்க நல்வினை செய்திலாத நான்பெற்ற நம்பியே!; நீ தமியை ஆகிக் கொல்வினை மாக்கள் சூழக் கிடத்தியோ என்று விம்மா - நீ தனித்தனியாகிக் கொடிய விலங்குகள் சூழக் கிடத்தியோ என்று அழுது; கொம்பு புல்லிய ஓர் கருவிளை தான் பூத்ததேபோல் - கொம்பைத் தழுவிய ஒரு கருவிளை தான் மலரொன்று மலர்ந்ததேபோல்; ஓர் கொம்புபற்றி ஒல்கி ஒரு கணால் நோக்கி நின்றாள் - ஒரு கொம்பைப்பற்றி ஒதுங்கி ஒரு கண்ணாலே பார்த்தவாறு நின்றாள்.
|
|
|
(வி - ம்.) 'ஒருகணால்' என்றதனால் ஒரு கருவிளைமலர் கூறப்பட்டது.
|
|
|
நின்னைப் பெறுதற்குரிய நல்வினை செய்திருந்தும் நின்னை வளர்த்தற்கு நல்வினை செய்தலாதேன் என விரிக்க. மாக்கள் - விலங்குகள்; கரி முதலியன. விம்மா -விம்மி; அழுது.
|
( 290 ) |