| நாமகள் இலம்பகம் |
183 |
|
| 324 |
என்பெழுந் துருகுபு சோர வீண்டிய |
| |
வன்பெழுந் தரசனுக் கவலித் தையனை |
| |
நுன்பழம் பகைதவ நூறு வாயென |
| |
வின்பழக் கிளவியி னிறைஞ்சி யேத்தினாள். |
|
|
(இ - ள்.) என்பு எழுந்து உருகுபு சோர ஈண்டிய அன்பு எழுந்து - (கந்துகன் மகனையெடுத்தது கண்ட விசயை) என்புக்குள்ளே தோன்றி மெய்யுருகித் தன்னை மறக்குமாறு கூடிய அன்பு வளர்ந்து; அரசனுக்கு அவலித்து - அரசன் மகனைக் காணாதிறந்தமை நினைந்து வருந்தி; நுன்பழம் பகைதவ நூறு வாய்என - நின் பழம்பகையைக் கிளையற அறுப்பாய் என்று; இன்பழக் கிளவியின் இறைஞ்சி ஐயனை ஏத்தினாள் - இனிய கனி மொழியால் இறைவனை வணங்கி நம்பியை வாழ்த்தினாள்.
|
|
|
(வி - ம்.) நுன்: திசைச்சொல். தவ - மிக. கிளையற நூறுவா யென்பது கருத்து.
|
|
|
அரசன்: சச்சந்தன். அவலித்தல் - வருந்துதல். ஐயன் - (சீவகன்) என்றது குழவியை. நூறுதல் - அழித்தல். இறைஞ்சி என்றதனால் இறைவனை என்பது பெற்றாம். இன்பழக் கிளவி - இனிய கற்பகக்கனி போன்ற மொழி
|
( 295 ) |
| 325 |
ஒழுக்கிய லருந்தவத் துடம்பு நீங்கினா |
| |
ரழிப்பரும் பொன்னுடம் படைந்த தொப்பவே |
| |
வழுக்கிய புதல்வனங் கொழிய மாமணி |
| |
விழுத்தகு மகனொடும் விரைவி னேகினான். |
|
|
(இ - ள்.) ஒழுக்குஇயல் அருந்தவத்து உடம்பு நீங்கினார் - ஒழுக்கத்தாலே அமைந்த தவத்தே நின்று ஊனுடம்பை விட்டவர்; அழிப்ப அரும்பொன் உடம்பு அடைந்தது ஒப்ப - அழித்தற்கியலாத உயர்ந்த தெய்வவுடம்பைப் பெற்றதுபோல; வழுக்கிய புதல்வன் அங்கு ஒழிய - தவறிய தன் மகன் சுடுகாட்டிலே கழியவிட்டு; மாமணி விழுத்தகு மகனொடும் விரைவில் ஏகினான் - உயர்ந்த மணியனைய சிறந்த மகனொடும் விரைந்து சென்றான்.
|
|
|
(வி - ம்.) கந்துக்கடனுக்கு மக்கள் பிறந்தவுடனே இறந்து கொண்டே வருதலின் அந்நிலை மாறிக் குழவியாகவே நீண்ட நாள்வரை யிருக்கும் மகனை எடுத்துச் செல்வதால், 'அழிப்பரும் பொன்னுடம்பு' உவமையாயிற்று. நச்சினார்க்கினியர் அழிப்பரு விழுத்தவமெனக் கூட்டுவர், தவவுடம்பை இவன் மகனுக் குவமை கூறினார் அவனாலே சீவகனைப் பெறுதலின்.
|
( 296 ) |