பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 184 

326 மின்னடு கனையிரு ணீந்தி மேதகு
பொன்னுடை வளநகர் பொலியப் புக்கபின்
றன்னுடை மதிசுடத் தளருந் தையலுக்
கின்னுடை யருண்மொழி யினிய செப்பினான்.

   (இ - ள்.) மின்அடு கனையிருள் நீந்தி - ஒளியையும் விழுங்கும் செறிந்த இருளை நீந்திச் சென்று; பொன்உடை வளநகர் பொலியப் புக்கபின் - தன் செல்வமுடைய வளமிகும் மனை பொலிவுற நுழைந்த பிறகு; தன்உடை மதிசுடத் தளரும் தையலுக்கு - தன் அறிவை (மகவின் பிரிவு) சுடுதலாலே தளர்ச்சியுறும் மனைவிக்கு; இன்உடை அருள்மொழி இனிய செப்பினான் - முனிவன் கூறிய அருள்மிகும் இருமொழிகளில் இனிய மொழியைக் கூறினான்.

 

   (வி - ம்.) பொலிய - துன்பம் நீங்கி இன்பம் நிகழ. இன்மொழி : 'புண்ணியற் பெறுதிர்' (சீவக. 1130) என்று முன்னர் முனிவன் கூறியது. முனிவன் கூறியவற்றைப் பின்னர் (சீவக) 1122, 1130 ஆம் பாடல்கள் அறிவிக்கும்.

( 297 )
327 பொருந்திய வுலகினுட் புகழ்கண் கூடிய
வருந்ததி யகற்றிய வாசில் கற்பினாய்
திருந்திய நின்மகன் றீதி னீங்கினான்
வருந்தனீ எம்மனை வருக வென்னவே.

   (இ - ள்.) உலகினுள் பொருந்திய புகழ்கண் கூடிய - உலகில் உள்ள புகழெல்லாம் ஈண்டிய; அருந்ததி அகற்றிய ஆசுஇல் கற்பினாய் - அருந்ததியை வென்ற குற்றமற்ற கற்புடையாய்!; எம்மனை - எம் இல்லாளே!; திருந்திய நின்மகன் தீதில் நீங்கினான் - நல்வினையாலே திருத்தமுற்ற நின்மகன் சாதலினின்று தப்பினான்; நீ வருந்தல் வருக என்ன - நீ வருந்தாமல் இங்கு வருக என்று கூற,

 

   (வி - ம்.) இப்பாட்டுக் குளகம். வருந்தல்: எதிம்றை வியங்கோள் வினைமுற்று. திருந்திய நின்மகன் என்றது தீதின் நீங்கினான் என்றற்குக் குறிப்பேதுவாய் நின்றது. தீது - சாக்காடு. மனை - மனைவி.

( 298 )
328 கள்ளலைத் திழிதருங் களிகொள் கோதைதன்
னுள்ளலைத் தெழுதரு முவகை யூர்தர
வள்ளலை வல்விரைந் தெய்த நம்பியை
வெள்ளிலை வேலினான் விரகி னீட்டினான்.

   (இ - ள்.) கள் அலைத்து இழிதரும் களிகொள் கோதை - தேன் மலரிதழை அலைத்து வடிதற்குக் காரணமான களிப்பை