நாமகள் இலம்பகம் |
186 |
|
மனம் நிறைய நிலையற்றுச் சுழலும் பெருஞ் செல்வத்தை வழங்கினான்.
|
|
(வி - ம்.) எழுகிளை மகிழ்ந்து - எழுபிறப்பும் எம்மைக் கிளையாக விரும்பி என்றுமாம்.
|
( 301 ) |
331 |
திருமகற் பெற்றெனச் செம்பொற் குன்றெனப் |
|
பெருநல நிதிதலை திறந்து பீடுடை |
|
யிருநிலத் திரவலர்க் கார்த்தி யின்னணஞ் |
|
செருநிலம் பயப்புறச் செல்வன் செல்லுமே. |
|
(இ - ள்.) திருமகன் பெற்றென - திருமகனை (வளர்க்கும் பேறு) பெற்றதனால்; செம்பொன் குன்று எனப் பெருநல நிதி தலைதிறந்து - பொன்மலையென இருந்த பெருகிய நல்ல நிதியறையைத் திறந்து ; பீடுஉடை இருநிலத்து இரவலர்க்கு ஆர்த்தி - பெருமையையுடைய நிலவுலகில் இரவலர்க்கு நிறைய நல்கி; இன்னணம் செருநிலம் பயப்புறச் செல்வன் செல்லும் - இவ்வாறு, அம்மகன் போரிலே தன் பகையை வெல்லும் பயன்பெறக் கந்துக்கடன் கொடைக்கடன் பூண்டு ஒழுகினான்.
|
|
(வி - ம்.) பெற்றென ஆர்த்தி: எனவென் எச்சம் காரணகாரியப் பொருட்டு; 'மருந்து தின்றெனப் பிணிநீல கிற்று' என்றாற்போல. செருநிலம் பயப்பு உற - அரசர் பொருத இந் நகரிலேயே சீவகனும் போர்செய்து பிறந்த பயன் உறவேண்டி.
|
|
ஆழியாற் குலனுணர்தலின் அதற்குரிய தொழிலே கருதினான் கந்துகனும்.
|
( 302 ) |
வேறு
|
|
332 |
நல்லுயிர் நீங்கலு நன்மாண் புடையதோர் |
|
புல்லுயிர் தன்னொடு நின்றுழிப் புல்லுயிர் |
|
கல்லுயிர் காட்டிற் கரப்பக் கலங்கவிழ்த் |
|
தல்லலுற் றாளுற்ற தாற்ற வுரைப்பாம். |
|
(இ - ள்.) நல்உயிர் நீங்கலும் - நல்லுயிராகிய சச்சந்தன் நீங்கலாலே; நல்மாண்பு உடையது ஓர் புல்உயிர் தன்னொடு நின்றுழி - நல்ல மாட்சிமையுடைய ஒரு சிற்றுயிரோடு நின்ற போது; கல்உயிர் காட்டில் புல்உயிர் கரப்ப - கல்லையுயிர்த்த சுடுகாட்டிலே அப்புல்லுயிரையும் ஊழ்வினை மறைத்தலால்; கலம் கவிழ்த்த அல்லல - கடலில் மரக்கலத்தை கவிழ்த்தவன் உற்ற துன்பம்போல; உற்றாள் உற்றது ஆற்ற உரைப்பாம் - அங்ஙனம் துன்பமடைந்தவள் மேலும் அடைந்ததை முற்றும் கூறுவோம்.
|
|