நாமகள் இலம்பகம் |
187 |
|
(வி - ம்.) கரப்ப: செய்விப்பதன் தொழில். 1.கவிழ்த்த அல்லல்: இது காரண காரியம்: கருவிக்கண் அடங்கும்; 'உண்ட எச்சில்' போல 'உற்றது' என்று இறந்தகாலத்தாற் கூறினார், கதையை உட்கொண்டு
|
|
நல்லுயிர் என்றது சச்சந்தனை. புல்லுயிர் என்றது மகவினை. கல்லுயிர் காடு - கல்லை உயிர்த்த சுடுகாடு. கவிழ்த்தவல்லல் எனற்பாலது கவிழ்த்தல்லல் என நின்றது கெடுதல் விகாரம்.
|
( 303 ) |
333 |
பொறியறு பாவையிற் பொம்மென விம்மி |
|
வெறியுறு கோதை வெறுநில மெய்த |
|
இறுமுறை யெழுச்சியி னெய்துவ தெல்லா |
|
நெறிமையிற் கூற நினைவி னகன்றாள். |
|
(இ - ள்.) வெறிஉறு கோதை - மணங்கமழ் கோதையாள்; பொறிஅறு பாவையின் - இயந்திரம் அற்ற பதுமைபோல; விம்மிப் பொம்என வெறுநிலம் எய்த - அழுது கடுக வெறுநிலத்திலே வீழ்தலால்; எழுச்சியின் இறுமுறை எய்துவது எல்லாம் - தொடக்கத்தினும் முடிவினும் வரக்கடவதெல்லாம்; நெறிமையின் கூற (கூனி) ஒழுங்காகக் கூறியதனாலும்; நினைவின் அகன்றாள் - (கனவின் பயனை) நினைத்தலாலும் கவலை நீங்கினாள்.
|
|
(வி - ம்.) பொம்மென: விரைவுக் குறிப்பு. 'எய்துவது எல்லாம்' என்றார், 'ஒருமை சுட்டிய பெயர்நிலைக் கிளவி, பன்மைக் காகும் இடனு மாருண்டே' (தொல். எச்ச - 65) என்றதனால், நெறிமை : மை : பகுதிப் பொருள் விகுதி.
|
|
கனவால் ஆக்கமும் உளதென்று கருதியே தேவியின் மனங்கொள்ளுமாறு கூனி தன் தெய்வத்தன்மையால் மேல்வருவன கூறுதலின் அதனை உட்கொண்டு 'நினைவின் அகன்றாள்' என்க.
|
( 304 ) |
334 |
பெருமகற் காக்கம் பிறழ்வின்றிக் கேட்டே |
|
திருமகள் தானினிச் செய்வதை யெல்லா |
|
மொருமனத் தன்னா யுரையென லோடுந் |
|
தெருமரு தெய்வதஞ் செப்பிய தன்றே. |
|
(இ - ள்.) பெருமகற்கு ஆக்கம் பிறழ்வு இன்றிக் கேட்டு - மாண்புறு மகனுக்கு வரும் நலனைத் திரிபின்றிக் கேட்டு; திருமகள் தான் இனிச் செய்வதை எல்லாம் - விசயை தான் இனிமேல் செய்யுங் காரியம் எல்லாம் ; ஒருமனத்து அன்னாய்! உரை எனலோடும் - ஒன்றுபட்ட உள்ளமுடைய அன்னையே! கூறுக என்றவுடன்; தெருமரு தெய்வதம் செப்பியது - (விசயை நிலைக்குக்) கலங்கிய தெய்வம் கூறத் தொடங்கியது.
|
|
|
1. கவிழ்த்தல் : காரணம் ; அல்லல் : காரணம் கருவியில் அடங்கும்.
|
|