நாமகள் இலம்பகம் |
189 |
|
தையுமுடைய பழம்பதியாகிய, உலகினை யெல்லாம் தமராம் தன்மையாற் காக்கின்ற தரணி திலகமென்பது நம்மவர் ஊர்; அது நண்ணலம் ஆகி - அந்நகரை அடையேமாகி,
|
|
(வி - ம்.) இப்பாட்டுக் குளகம்.
|
|
ஓசனை: வடசொற் சிதைவு. விசயை நோற்பதற்குத் தாபதப் பள்ளி வேண்டுதலானும், அரசனை அமரில் நீத்துப் புதல்வனைப் புறங்காட்டில் விட்டுத் தமரிடஞ் சேரல் ஆகாமையானும், கூனி, 'நண்ணலமாகி' என்றாள்.
|
|
குமரிமதில் கொடிக்கோபுரம் என நிரல் நிரலாக்கினுமாம். குமரி - கன்னிமை; அஃதாவது அழியாமை. தமரியலான் ஓம்பும் என்க. தமரியல் - கேண்மை. நண்ணலம் : தன்மைப் பன்மை.
|
( 307 ) |
337 |
வண்டார் குவளைய வாவியும் பொய்கையுங் |
|
கண்டார் மனங்கவர் காவுங் கஞலிய |
|
தண்டா ரணியத்துத் தாபதப் பள்ளியொன் |
|
றுண்டாங் கதனுள் ளுறைகுவ மென்றாள். |
|
(இ - ள்.) வண்டுஆர் குவளைய வாவியும் பொய்கையும் கண்டார் மனம்கவர் காவும் கஞலிய - வண்டுகள் நிறைந்த குவளை மலர்களையுடைய ஓடையும் பொய்கையும் கண்டவர் உளத்தைக் கவரும் பொழிலும் நெருங்கிய; தண்டாரணியத்துத் தாபதப் பள்ளி ஒன்று உண்டு - தண்டகாரணியம் என்கிற வனத்திலே ஒரு தாபதப்பள்ளி உளது; ஆங்கு அதனுள் உறைகுவம் என்றாள் - அவ்வனத்தே அப் பள்ளியில் (அத் தாபதருடன்) உறைவோம் என்று கூறினாள்.
|
|
(வி - ம்.) வாவி - யாற்றில் உள்ள ஓடை, பொய்கை - மானிடர் ஆக்காத நீர்நிலை. (ஆங்கு : 'உவம வுருபு' என்றும், 'அத்தாபதர் உறைவது போல' என அதற்குப் பொருளும் நச்சினார்க்கினியர் கூறுவர்.
|
|
தண்டாரணியம் : தண்டகாரணியம் என்பதன் மரூஉ. தண்டகர் என்றும் ஒரு சாதியினர் உறைதலான் அப்பெயர் பெற்றதென்ப. உறைகுவம் : தன்மைப்பன்மை.
|
( 308 ) |
338 |
பொருளுடை வாய்மொழி போற்றினள் கூற |
|
மருளுடை மாதர் மதித்தன ளாகி |
|
யருளுடை மாதவ ரத்திசை முன்னி |
|
யிருளிடை மின்னி னிலங்கிழை சென்றாள். |
|
(இ - ள்.) பொருள் உடை வாய்மொழி போற்றினள் கூற - (கூனி) பொருளுற்ற உண்மை மொழியை விருப்பத்துடன் கூற; மருள்உடை மாதர் மதித்தனள் ஆகி - மயக்கம் நீங்கிய விசயை அம்மொழியைத் தன் கருத்துக்குத் தக்கது என ஒப்பியவளாய்;
|
|