பதிகம் |
19 |
|
(வி - ம்.) தன் மாமனுடைய மகள், அவன் கண்போன்ற மகள். அவன் தேவி புதவியுடைய வேலெனச் சேந்து நீண்ட கண்மணியிற் யாவை அன்ன பெண்; 'உண்கண், மணிவாழ் பாவை' (நற்றிணை-184) என்றார் பிறரும்.
|
|
வேல்படும்பொழுதே புண்ணும் உடனே நிகழ்தலின் புண்தோய்த் தென்றார். (மதி தோய்) தோய் : 1உவமவாசகம். குடை : எழுவாய். குடைத் தண்ணிழலும் பாடம்.
|
|
மாமன் மகள் என்பதற்கு மாமன் மனைவி யென்று பொருள் கொள்ளுதலே சிறப்பாகுமென்று தோன்றுகிறது. இன்றேல் 'அவன் தேவி' என்ற சொற்களை வருவித்து 'அவளுக்குப் பெண்' என முடித்தல் வேண்டும். மகள் என்பதற்கு மனைவியெனச் சங்க நூல்களில் வருவதுண்டு. 'மனக் கினியாற்கு நீ மகளாயதூஉம்' (மணி - பதி-21) என வருதல் காண்க. 'புதவி' என்பது 'பிரிதிவி சுந்தரி' என்பதன் சிதைவு என்பர்.
|
( 21 ) |
27 |
திறைமன்ன ருய்ப்பத் திருநிற்பச் செங்கோ னடப்பக் |
|
குறைவின்றிக் கொற்ற முயரத்தெவ் வர்தோ் பணிய |
|
வுறைகின்ற காலத் தறங்கேட்டுரு முற்ற பாம்பி |
|
னறிவன் னடிக்கீ ழரசஞ்சித் துறந்த வாறும், |
|
(இ - ள்.) குறைவு இன்றி மன்னர் திறை உய்ப்ப-குறைவு இல்லாமல் அரசர்கள் கப்பம் செலுத்தவும்; திருநிற்ப-செல்வம் நிலைபெற்றிருககவும்; செங்கோல் நடப்ப-நல்லாட்சி நடைபெறவும்; கொற்றம் உயர -வெற்றி மேம்படுமாறு ; தெவ்வர் தேர்பணிய- பகைவருடைய தேர் வணங்க; உறைகின்ற காலத்து - வீற்றிருக்குங் காலத்திலே, அறம் கேட்டு உரும் உற்ற பாம்பின் அரசு அஞ்சி - அறத்தைக் கேட்டு இடியேற்றின் ஒலிகேட்ட பாம்பைப்போல அரசாட்சியினிடம் அச்சங்கொண்டு; அறிவன் அடிக்கீழ் துறந்த ஆறும் - அறிவன் திருவடியிலே துறவு மேற்கொண்டபடியும்;
|
|
(வி - ம்.) உய்ப்ப - செலுத்த. நிற்ப - கெடாது நிற்ப. குறை வின்றி: மத்திம தீபம் (இடையிலிருந்த இச்சொல் முன்னுள்ள சொற்களுக்கும் பின்னுள்ள சொற்களுக்கும் விளக்கமாக இருந்தது. எனவே, குறைவு இன்றி என்பதை யாவற்றிற்குங் கூட்டுக. மத்திமதீபம் என்பது இடைநிலை விளக்கு என்னும் அணி.)
|
|
இவனது துறவு கூறவே எல்லார் துறவும் உணர்த்தியதாயிற்று.
|
|
எல்லோரும் என்பது சீவகனுடைய தம்பியருந் தோழரும் தேவியரும் ஆகிய எல்லோரையுங் குறிக்கின்றது. அறிவன் - அருகப்பெருமான்.
|
( 22 ) |
|
1. உவம வாசகம் - உவம உருபு.
|
|