பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 190 

அருளுடை மாதவர் அத்திசை முன்னி - அருளுடைய மாதவர் வாழும் அத்திசையினைக் குறிப்பிட்டு; இருளிடை மின்னின் இலங்கிழை சென்றாள் - இருளின்ஊடே மின்னுக் கொடிபோல விளங்கும் அணிகலனையுடையாள் சென்றாள்.

 

   (வி - ம்.) கேளிரைக் கண்டால் துன்பம் மிகும் என்றும் நோற்பது கருதியதாலும் யான் கருதியதையே கூறினாள் என்னாது அவளே கூறினாளாகக் கொண்டமை தோன்ற, 'மதித்தனளாகி' என்றார். ['மகப் பெற்ற புனிறு தீராது' (மணி. 7, 75) இரவிற் சேற லரிதென்று கருதித் தெய்வதம் தன் தெய்வத்தன்மையாற் கொண்டு போகின்ற விரைவு தோன்ற, 'மின்னின் என்றார்' என்பர் நச்சினார்க்கினியர்.]

 

   விசயையில்புக்கு மிகவும் பொருத்தமான மொழியாகலின் பொருளுடை மொழி என்றும், அவட்குப் பெரிதும் நன்மை விளைப்பதாகலின் வாய்மொழி என்றும் கூறினர். உடைமாதர்: வினைத்தொகை மாதவர் உறையும் அத்திசை என்றொரு சொல் வருவித்துக்கொள்க.

( 309 )
339 உருவ மாமதி வாண்முகத் தோடிய
விருவி லும்மெறி மாமக ரக்குழைத்
திருவி லும்மிவை தேமொழி மாதரைப்
பொருவி னீளதர் போக்குவ போன்றவே.

   (இ - ள்.) உருவமாமதி வாண்முகத்து ஓடிய இருவிலும் - (முன்னர்) அழகிய நிறைமதி போலும் ஒளிதந்த முகத்தில் இப்பொழுது அது நீங்கியதால் வருத்தம் நிறைந்த கரிய ஒளியும்; மாமகரக் குழைஎறி திருவிலும் - பெரிய மகரக்குழை வீசும் பல்நிற ஒளியும்; இவை தேன்மொழி மாதரைப் பொருஇல் நீள் அதர் போக்குவ போன்ற- (ஆகிய) இவைகள் இன்மொழி விசயையை வெம்மையில் ஒப்பு இல்லாத வழியிலே செலுத்துவ போன்றன.

 

   (வி - ம்.) இரு வில் - கரிய வொளி, 'இருங்கண் யானை' (பதிற்) என்பது போல. அதர் போக்குவ : விளக்கு (இதனை ஆகுபெயரென்பர் நச்சி.)

 

   உருவமாமதி - அழகிய முழுத்திங்கள். திருவிலும் ஆகிய இவை என்க. பொருவில் என்பதற்கு நெடுமையால் ஒப்பற்ற என்பது சிறப்பு. என்னை ? இரவில் போவார்க்கு வெப்பங் கூறவேண்டாமையின் என்க. போக்குவ: பலவறி சொல்; இது காரிய ஆகுபெயர். விளக்கு என்றும் பொருட்டென்க.

( 310 )

வேறு

 
340 சிலம்பி ரங்கிப் போற்றிசைப்பத்
  திருவிற் கைபோய் மெய்காப்ப
விலங்குபொற் கிண்கிணியுங் கலையு
  மேங்க வெறிவேற்கண்