நாமகள் இலம்பகம் |
191 |
|
340 |
மலங்க மணிமலர்ந்த பவளக் |
|
கொம்பு முழு மெய்யுஞ் |
|
சிலம்பி வலந்தது போற் |
|
போர்வை போர்த்துச் செல்லுற்றாள். |
|
(இ - ள்.) சிலம்பு இரங்கிப் போற்று இசைப்ப - (விசயை அணிந்த) சிலம்புகள் இரங்கி ஓம்படை கூற; திருவில் கைபோய் மெய்காப்ப - (குழை வீசிய) அழகிய ஒளி பக்கத்தே சென்று மெய் காக்க; இலங்குபொன் கிண்கிணியும் கலையும் ஏங்க - விளங்கும் பொன்னாலான கிண்கிணியும் மேகலையும் ஏங்க; எறிவேல் கண்மலங்க - எறியும் வேலனைய கண்கள் அஞ்சிச் சுழல; மணிமலர்ந்த பவளக்கொம்பு - மணியை மலர்ந்த பவளக்கொடி; முழுமெய்யும் சிலம்பி வலந்ததுபோல் - உடம்பெல்லாம் சிலம்ப நூலாற் சூழ்ந்ததுபோல்; போர்வை போர்த்துச செல்லுற்றாள் - போர்வையாற் போர்த்துக்கொண்டு செல்லலுற்றாள்.
|
|
(வி - ம்.) வலம்புரி சலஞ்சலம் வளைஇய தொத்தவளாதலின் (சீவக - 184) மணியைப் பூத்ததொரு பவளக் கொம்பைச் சிலம்பி சூழ்ந்தது போல மெய்ம் முழுதும் போர்வையாலே மறைத்துச் செல்லுற்றாள். தானுங் கூனியுமே செல்வதால் அஞ்சி மலங்கினாள்.
|
( 311 ) |
341 |
பஞ்சி யடரனிச்ச நெருஞ்சி |
|
யீன்ற பழமா லென் |
|
றஞ்சு மலரடிக ளரங்கண் |
|
டன்ன வருங்காட்டுட் |
|
குஞ்சித் தசைந் தசைந்து |
|
குருதி கான்று வெய்துயிரா |
|
வஞ்சி யிடைநுடங்க மயில்கை |
|
வீசி நடந்ததே. |
|
(இ - ள்.) பஞ்சிஅடர் அனிச்சம் நெருஞ்சியீன்ற பழம் என்று - பஞ்சித்திரளையும் அனிச்ச மலரையும் நெருஞ்சிப்பழம் என்று; அஞ்சும் மலர் அடிகள் - அஞ்சும் மலரனைய அடிகள்; அரம்கண்ட அன்ன அருங்காட்டுள் - வாளரம் அனைய (பரல்கள் நிறைந்த) அரிய காட்டின் வழியில்; குஞ்சித்து அசைந்து அசைந்து குருதி கான்று வெய்து உயிரா - குந்திக் குந்தி இளைத்திளைத்துக் கால்கள் குருதி காலப் பெருமூச்செறிந்து; வஞ்சி இடைநுடங்க - வஞ்சிக் கொடியனைய இடை வாட ; மயில் கைவீசி நடந்தது - விசயையாகிய மயில் கையை வீசி நடந்தது.
|
|
(வி - ம்.) ஏ: ஈற்றசை [நச்சினார்க்கினியர் தேற்றம் என்பர். மற்றும் அவர் ,'குருதிகான்று குஞ்சித்து அசைந்தசைந்து' செல்வதைப்
|
|