பக்கம் எண் :

நாமகள் இலம்பகம் 192 

   பஞ்சியடரையும் அனிச்சத்தையுங் கண்டே என்று மாட்டேற்றுவர். மற்றும் 'நடந்ததே ' என்பதற்கு 'நடந்த தன்மையே' என்று பொருள் கூறுவர்.] அடர் - நெருக்கம். மயில் என்றதற்கேற்ப நடந்தது என்றார்.

( 312 )

வேறு

 
342 தடங்கொ டாமரைத் தாதுறை தேவியுங்
குடங்கை போலுண்கட் கூனியுங் கூர்ம்பரற்
கடங்க ளும்மலை யுங்கடந் தார்புன
லிடங்கொள் யாற்றக மெய்தின ரென்பவே.

   (இ - ள்.) தடம் கொள் தாமரைத் தாதுஉறை தேவியும் - அகன்ற தாமரை மலரில் இருக்கும் திருவனைய விசயையும் ; குடங்கைபோல் உண்கண் கூனியும் - உள்ளங்கை போன்ற மை தீட்டிய கண்களையுடைய கூனியும்; கூர்பரல் கடங்களும் மலையும் கடந்து - கூரிய பருக்கைக் கற்கள் நிறைந்த காட்டு நெறியையும் மலையையுங் கடந்து; ஆர்புனல் இடம்கொள் யாற்றகம் எய்தினர் - நிறைந்த நீர்அறாத அமரிகை யாற்றின் இடைக்குறையை அடைந்தனர்.

 

   (வி - ம்.) என்ப, ஏ: அசைகள்.

 

   [நச்சினார்க்கினியர், 338-முதல் 342-வரை ஐந்து செய்யுட்களையும் ஒரு தொடராக்கி மாட்டேற்றிக் கூறும் முடிபு:-

 

   கூனி மொழிகளை விரும்பினளாய்க் கூற, அதனை மாதர் மதித்தனளாய், மாதவரிருக்கின்ற அத்திசையைக் கருதிப் போர்வை போர்த்து அருங்காட்டிலே இடைநுடங்கக் கையைவீசி, நடைக்கு வருந்தாதொரு மயில் நடந்த தன்மையே மலரடிகளாலே செல்லலுற்றாள்; அப்பொழுது, இருவிலும் திருவிலும் மாதரை இரவிடை வழிபோக்கும் விளக்குப் போன்றன. அவ்விளக்கிலே கூனியொழிய வேறொருவ ரின்மையின், கண் அலமருதலாற் சிலம்பு இசைப்பத் திருவிற் காப்பக் கிண்கிணியும் கலையும் ஏங்கக் கடங்களும் மலையுங் கடந்து, அந்த இலங்கிழை மின் போலச் சென்றாள்: இங்ஙனஞ் சென்ற தாமரைத் தாதுறை தேவியும் அவளுக்கு ஏற்பச் சென்ற கூனியும் பின்னர் யாற்றிடைக் குறையைச் சேர்ந்தார் என்க.]

( 313 )
343 எல்லை எய்திய வாயிரச் செங்கதிர்
மல்லன் மாக்கட றோன்றலும் வைகிருட்
டொல்லை நல்வினை முற்படத் தோன்றிய
வல்லல் வெவ்வினை போல வகன்றதே.

   (இ - ள்.) எல்லை எய்திய ஆயிரச் செங்கதிர் (இரவின்) முடிவில் தோன்றிய ஞாயிற்றின் எண்ணற்ற செங்திர்கள் மல்லல் மாக்கடல் தோன்றலும் - வளமிகும் பெருங்கடலில் காண்