நாமகள் இலம்பகம் |
194 |
|
தடவ ; ஐயவோ என்று கண் மலர்ந்து - ஐயவோ ! எனக் கூறியவாறு கண் விழித்து ; ஆய்மதி மொய்கொள் பூமி முளைப்பது போல - (ஒளி) சுருங்கிய மதி அணுச்செறிவு கொண்ட நிலமிசைத் தோன்றுவதுபோல ; எழுந்தனள் - எழுந்தாள்.
|
|
(வி - ம்.) தெய்வம் கூனி வடிவாய் நிற்றலின் தன் தொழிலுக்குத் தக்கவாறு அடி தை வந்தது. தனக்குத் துன்பம் நேர்ந்த பிறகு இப்போதுதான் துயின்றாளாதலின், துயிலும்போது கனவில் தன் வாழ்வின் அலங்கோலத்தைக் கண்டிருப்பாளாதலின் 'ஐயவோ' என இரங்கினாள். மற்றும் அரசனைக் கனவிற் கண்டு விழித்துப் பார்க்கையில் நனவாகாமையின் ஐயவோ என்றான் எனலுமாய். 'ஐய! என்பதுஅரசனை விளிப்பதும், ஓ: இரக்கக் குறிப்பும் ஆகும். ஆய்மதி-ஒளியற்ற மதி. அதுவும் விடியலில் தோன்றும். மெய்-செறிவு.
|
|
ஆய்மதி தோன்றல் முகமெடுத்தற்கு உவமை. அன்னை, ஈண்டு முறைப் பெயரன்மையின். 'அன்னை யென்னை' (தொல் - பொருளியல் - 52) என்பதாற் கொள்க.
|
( 316 ) |
346 |
தூவி யஞ்சிறை யன்னமுந் தோகையு |
|
மேவி மென்புன மானின மாதியா |
|
நாவி நாறெழின் மேனியைக் கண்டுகண் |
|
டாவித் தாற்றுகி லாதழு திட்டவே. |
|
(இ - ள்.) தூவி அம்சிறை அன்னமும் தோகையும்- (அப்போது) தூவி பொருந்திய அழகிய சிறகினையுடைய அன்னமும் மயிலும்; புனம்மென் மானினம் ஆதியா - காட்டில் உள்ள மென்மைப் பண்புடைய மான்குழு முதலாக ; மேவி நாவி நாறு எழில் மேனியைக் கண்டு கண்டு - ஆங்கு வந்து புழுகு கமழும் அழகிய (விசயையின்) மெய்யைப் பார்த்துப் பார்த்து; ஆவித்து ஆற்றுகிலாது அழுதிட்டவே - கொட்டாவிவிட்டு (இவள் நிலைக்கு) ஆற்றாமல் அழுதிட்டனவே.
|
|
(வி - ம்.) ஏ : தேற்றம் மயில் முதலிய பறவைகளும் மானினமும் தமக்கியல்பாக நிகழ்த்திய கொட்டாவி கொள்ளுதலையும் ஆரவாரித்தலையும் விசயையின் நிலைக்கு இரங்கியனவாகத் தம் குறிப்பை ஏற்றினார். அன்னம் முதலியவை காலையிற் கொட்டாவி கோடல் இயல்பு எனத் தெரிகிறது.
|
|
நச்சினார்கினியர் , 'தமக்கு இவை இயல்பாகக் காலையிற் செய்தன அல்ல என்க' என்பர்.
|
( 317 ) |
347 |
கொம்மை வெம்முலைப் போதிற் கொடியனா |
|
ளும்மை நின்றதொ ரூழ்வினை யுண்மையா |
|
ளிம்மை யிவ்விட ருற்றன ளெய்தினாள் |
|
செம்மை மாதவர் செய்தவப் பள்ளியே. |
|