நாமகள் இலம்பகம் |
195 |
|
(இ - ள்.) கொம்மை வெம்முலைப் போதின் கொடிஅனாள்- பருத்த பால்சுரக்க வெவ்விதாகிய முலைகளையுடைய மலர் நிறைந்த கொடிபோன்ற விசயை; உம்மை நின்றதொர் ஊழ்வினை உண்மையால் - முற்பிறப்பிற் செய்த தீவினை ஒன்று இருந்ததால் ; இம்மை இவ்இடர் உற்றனள் - இப்பிறப்பிலே இத்தகைய துயருற்றனள்; செம்மை மாதவர் செய்தவப் பள்ளி எய்தினாள் - (இனி, அது நீங்குதலால்) செவ்வையான மாதவர் தவம்புரியும் பள்ளியைச் சேர்ந்தாள்.
|
|
(வி - ம்.) போதிற்கொடி : திருமகள். உம்மை - முற்பிறப்பு. எய்தினாள் என்றது நல்வினை வந்து தலைப்படுதலானே எய்தினான் என்பது படநின்றது.
|
( 318 ) |
வேறு
|
|
348 |
வாளுறை நெடுங்க ணாளை |
|
மாதவ மகளி ரெல்லாந் |
|
தோளுறப் புல்லு வார்போற் |
|
றொக்கெதிர் கொண்டு புக்குத் |
|
தாளுறு வருத்த மோம்பித் |
|
தவநெறிப் படுக்க லுற்று |
|
நாளுறத் திங்க ளூர |
|
நல்லணி நீக்கு கின்றார். |
|
(இ - ள்.) மாதவ மகளிரெல்லாம் தொக்கு - மாதவம் புரியும் பெண்டிரெல்லோரும் (விசயை வருவது கண்டு) ஒன்று படக் குழுமி; வாள்உறை நெடுங்கணாளைத் தோளுறப் புல்லுவார் போல் எதிர்கொண்டு புக்கு - (முன்) வாளின் தன்மை தங்கிய கண்ணாளைத் தோளுறத் தழுவுவார்போல் எதிர்கொண்டு சென்று; தாள்உறு வருத்தம் ஓம்பி - (நடையினால்) அடிகள் அடைந்த வருத்தத்தை நீக்கி; தவநெறிப் படுக்கல் உற்று - (அவள் கருத்து உணர்ந்து) தவநெறியிலே செலுத்தத் தொடங்கி; திங்கள் ஊர நாள்உற நல்லணி நீக்குகின்றார்-நாளதொறும் திங்கள் ஒரு கலை மேற்கொள்ளும் வளர்பிறையிலே நல்லநாள் வந்தபோது அழகிய அணிகளை நீக்குவாராயினர்.
|
|
(வி - ம்.) முன்னர் ஊடலால் தன் கணவனுக்கு வருத்த மூட்டிய கண்கள் என்பதற்கு, 'வாளுறை நெடுங்கணாள்' என்றார். அங்ஙனமின்றித் தவநெறி விழைந்து வரும் இவள் கண்களைப் பிறர்க்கு வருத்த மூட்டுங் கண்கள் என்றல் பொருந்தாமை உணர்க.
|
|
மாதவஞ் செய்வார் பிறரைத்தழுவலாகாமையின் 'புல்லுவார்போல்' என்றார். விசயை கொண்ட தவநெறி கணவனை யிழந்ததற்கும் மகன் ஆக்கத்திற்கும் பொருந்தியதாகும்.
|
|