நாமகள் இலம்பகம் |
196 |
|
விசயை நீக்குவதை, ஏவினாரைக் கருத்தாவாகக் கொண்டு அவர் மேல் ஏற்றினார்; 'அரசரெடுத்த தேவகுலம்' போல.
|
( 319 ) |
வேறு
|
|
349 |
திருந்து தகரச் செந்நெருப்பிற் |
|
றேன்றோய்த் தமிர்தங் கொளவுயிர்க்குங் |
|
கருங்கா ழகிலி னறும்புகையிற் |
|
கழுமிக் கோதை கண்படுக்குந் |
|
திருந்து நானக் குழல்புலம்பத் |
|
தேனும் வண்டு மிசைப்புலம்ப |
|
வரும்பொன் மாலை யலங்கலோ |
|
டாரம் புலம்ப வகற்றினாள். |
|
(இ - ள்.) திருந்து தகரச் செந்நெருப்பில் தேன்தோய்த்து அமிர் தம்கொள உயிர்க்கும் கருங்காழ் அகிலின் நறும்புகையில் கழுமி - நல்ல தகர விறகால் ஆக்கிய செந்தீயில் தேனில் தோய்ப்பதால் இனிய மணம்கமழும் கரிய அகிற்கட்டையால் எழுந்த இனிய புகையில் மயங்கி; கோதை கண்படுக்கும் திருந்து நானக்குழல் புலம்ப - மலர்மாலை துயிலும் நல்ல புழுகுகலந்த கூந்தல் வருந்துமாறும்; தேனும் வண்டும் மிசைப் புலம்ப - தேனினமும் வண்டினமும் மலரின்மையின் இசைக்கு வருந்தவும்; அரும் பொன்மாலை அலங்கலோடு ஆரம்புலம்ப - அரிய பொன்அரி மாலையும் நெற்றி மாலையும் தலைக்கோலமாகிய முத்துமாலையும் வருந்த (இவற்றைக் குழலிலிருந்து) நீக்கினாள்.
|
|
(வி - ம்.) புலம்ப - தனிப்ப என்றுமாம். தகரம் : ஒருவகை மணமரம். கண்படுத்தலாவது பொருந்தியிருத்தல். தேனும் வண்டும் இனங்கள். பொன்னரிமாலை - பொன்னை அரிந்து தொடுத்தமாலை.
|
( 320 ) |
350 |
திங்க ளுகிரிற் சொலிப்பதுபோற் |
|
றிலகம் விரலிற் றானீக்கிப் |
|
பைம்பொன் மகர குண்டலமும் |
|
பாவை கழுத்தி னணிகலமும் |
|
வெங்கண் வேந்தற் கமிர்தாகி |
|
வேற்கட் பாவை பகையாய |
|
வங்கண் முலையி னணிமுத்து |
|
மரும்பொற் பூணு மகற்றினாள். |
|
(இ - ள்.) திங்கள் உகிரின் சொலிப்பதுபோல் திலகம் விரலின் தான்நீக்கி - திங்களை நகத்தால் உரிப்பதுபோல நெற்றித்
|
|